சங்கமம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10-வது நாளாக தொடர்ந்த ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிபார்க்கப்பட்டு, ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கிய சாிபார்ப்பு பணி இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது. இந்நிலையில் 3-வது கட்டமாக நகைகள் சரிபார்ப்பு பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலில் ஆய்வு செய்தனர்.

நேற்று 10-வது நாளாக நடந்த ஆய்வில் கோவிலின் பல்வேறு கணக்கு விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு பணி, இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *