சங்கமம்

விநாயகர் சிலைகளை கரைக்கும்போது உயிரிழந்த 19 பேர்: அதிர்ச்சி தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் போது 19 பேர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப் பட்டது என்பதும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் விநாயகர் சிலைகளை தற்போது கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வுகளில் மொத்தம் 19 பேர் உயிரிழந்ததாக அம்மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது
விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது 14 பேர் மூழ்கி இறந்து விட்டதாகவும் 5 பேர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது மின்சாரத் தாக்குதல் உள்ளிட்ட விபத்துகளால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விநாயகர் சிலைகளை கரைக்க நிகழ்வுகளில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *