சங்கமம்

ஒரு வார்த்தையை கூற விரும்புகிறேன்… ஆனால் இங்கு கூற முடியாது – ராகுல் டிராவிட் கலகல பேச்சு

ஆசியா கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டி நேற்று தொடங்கியது. சூப்பர் 4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்றில் இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. இதனிடையே, இரு அணிகளும் இடையேயான சூப்பர் 4 சுற்று இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய அணியை ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளதே? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், ஆம், பாகிஸ்தான் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணி தான்.

ஆனால், அவர்களை நாங்கள் 147 ரன்களுக்குள் சுருட்டியுள்ளோம். நீங்கள் கொடுக்கும் முடிவுகளை கொண்டு நீங்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். சிறந்த முடிவுகளை கொடுக்கக்கூடிய சிறந்த பந்து வீச்சாளர்கள் எங்களிடம் உள்ளனர் என எனக்கு நம்பிக்கை உள்ளது. அது அப்படி இல்லாமல்… நான் ஒரு வார்த்தையை கூற விரும்புகிறேன். ஆனால், அந்த வார்த்தையை இங்கு கூற முடியாது. அந்த வார்த்தை எனது மனதில் இருந்து வந்துவிட்டது ஆனால், இங்கு அதை கூறமுடியாது. எஸ் (S) என தொடங்கும் அந்த வார்த்தை 4 எழுத்துக்களை கொண்டது’ என்றார். டிராவிட் பேசியதும் செய்தியாளர்கள் சந்திப்பு அரங்கமே கலகலவென சிரிப்பலையில் அதிர்ந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *