கனடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோக சம்பவம்

ரொறன்ரோவில் தனியாக ஸ்கை டைவிங் செய்த வேளை ஏற்பட்ட அசம்பாவிதத்தில் டிக்டாக் பிரபலமான இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் – ரொறன்ரோ பகுதியை சேர்ந்த இளம்பெண் தன்யா பர்டஷி (வயது 21).கல்லூரி மாணவியான இவர் 2017-ம் ஆண்டு நடந்த ‘மிஸ் டீன் கனடா’ அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றுள்ளார்.

தன்யா பர்டஷி டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். அவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் டிக்டாக்கில் பின் தொடர்கின்றனர்.இதனிடையே, தன்யா பர்டஷி வானில் இருந்து கிழே பாரசூட்டில் கீழே குதித்து சாகத்தில் ஈடுபடும் ஸ்கை டைவிங்கில் (Sky Diving)  மிகவும் ஆர்வம் கொண்டவர்.

அவர், பல முறை 2 பேர் குதிக்கும் வகையில் உதவியாளருடன் வானில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகம் செய்துள்ளார். பின்னர் பயிற்சி பெற்று தனியாக ஸ்கை டைவிங் செய்ய உரிமம் பெற்றார்.இந்நிலையில், தன்யா பர்டஷி ரொறன்ரோவில் நேற்று தனியாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். விமானத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தன்யா குதித்துள்ளார். ஆனால், அவர் தாமதமாக பாரசூட்டை திறந்துள்ளார்.

இதனால், பாரசூட் முழுமையாக திறந்து வேலை செய்வதற்குள் அவர் தரையில் வேகமாக விழுந்தார். இதையடுத்து, தன்யாவை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

தன்யாவை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *