சங்கமம்

ஆசிய கோப்பை: இந்திய அணியின் தொடக்க ஜோடி யார்? – ரோகித் சர்மா பதில்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், ‘கடந்த சில தொடர்களில் இந்திய அணி பல தொடக்க ஜோடிகளை சோதனை முயற்சியாக களம் இறக்கியது. ரிஷப் பண்ட் தொடக்க வீரராக வந்தார்.

அந்த வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆடினார். இப்போது காயத்தில் இருந்து மீண்ட லோகேஷ் ராகுல் வந்திருப்பதால் அவர் நேரடியாக தொடக்க வரிசைக்கு பயன்படுத்தப்படுவாரா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது :- ‘டாஸ் போட்ட பிறகு இந்திய அணியின் தொடக்க ஜோடி யார் என்பதை நீங்கள் பார்க்கலாம். அதுவரை இது ரகசியமாக இருக்கட்டும்.

கடந்த சில தொடர்களில் நாங்கள் சில புதிய விஷயங்களை செய்து பார்த்தோம். அவற்றில் சிலவற்றுக்கு பலன் கிடைத்தது. சில கைகூடவில்லை. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புதிய முயற்சிகளை செய்து பார்ப்போம். அணிச் சேர்ச்கையை பொறுத்தமட்டில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்பது போட்டி நடைபெறும் நாள் தான் உங்களுக்கு தெரிய வரும் ‘ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *