சன்னா மரினாவை உளவு பார்த்தார்களா அவரின் தோழிகள்?… ஏலையா க.முருகதாசன்.

அண்மை நாட்களாக உலகளாவிய பேசுபொருளாக இருப்பது பின்லண்ட் நாட்டின் பிரதமர் சன்னா மரினின் தனிப்பட்ட நடவடிக்கை பற்றியதாகும்.
அப்படி என்ன அவரின் தனிப்பட்ட நடவடிக்கை பேசுபொருளாகியுள்ளது என்பதை நோக்குவதற்கு முன்னால்,உக்ரைன் ரஸ்யப் போர் பற்றியும் ரஸ்யாவுக்கு எதிராக அணிதிரண்டுள்ள நாடுகள் பற்றியும் அதனால் அணிதிரண்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சாதக பாதக விளைவுகளை விலைவாசி ஏற்றங்கள் மூலமும், பொருட்களின் தட்டுப்பாடுகள் மூலமும்,மக்களின் அதிருப்திகள் மூலமும் ஆட்சியாளர்களுக்கெதிரான கருத்துக் கணிப்புகள் மூலமும் அணிதிரண்ட நாடுகள் சந்தித்து வருகின்றன.
அண்மை நாட்களில் ஜேர்மனிய அதிபரின் ஆட்சிமுறைபற்றிய கருத்துக் கணிப்பை பில்ட் பத்திரிகை மேற் கொண்டிருந்தது.அதில் அவருக்கு, எதிரான கருத்தே பெருபான்மையைப் பெற்றிருந்து.
ஆனாலும் இக்கருத்து கணிப்புக்கள் தொடரானவையுமல்ல நிலையானவையுமல்ல.
இது ஒரு புறமிருக்க தனக்கு எதிராக அணிதிரண்டுள்ள நாடுகளை பொருளாதார ரீதியாகவும்,அந்தந்த நாட்டு மக்களுக்கும், அதிபர்களுக்கெதிராகவும் உளவியல் சூழ்ச்சிப் போரையும் ரஸ்யா கனகச்சிதமாக நடத்தி வருகின்றது.
உலகிலேயே, எந்தத் தடைகளையும் உடைத்துக் கொண்டு எந்த நாட்டிற்குள்ளும் ஊடுருவி கட்டமைப்புகளை சிதைக்கக் கூடிய உளவு அமைப்புகளாக இருப்பவை அமெரிக்க, ரஸ்ய, இந்திய,இஸ்ரேலிய அமைப்புகளேயாகும்.
இவை ஒரு நாட்டுக்கு உதவி செய்து கொண்டே அந்நாட்டை சிதிலமடையம் வேலையையும் செய்யக்கூடியவை.அடைமழையிலும் சூறாவளிக் காற்றிலும்கூட தீக்குச்சி நெருப்பைக்கூட அணையாமல் கொண்டு போகும் வல்லமையை ஒத்த ஆற்றல் மேற்சொன்ன உளவு அமைப்புகளுக்கு உண்டு.
உக்ரைன் நேட்டோவில் அங்கம் வகிக்க எடுக்கும் முயற்சியை முறியடிக்கவென உக்ரைன் மீது போர் தொடுத்ததாக சொல்லிக் கொள்ளும் ரஸ்யா,அதை ஒரு சாட்டாக வைத்துப் போர் தொடுத்தமைக்கான காரணம் வேறு பலவும் உண்டு.
குறிப்பாக பல நாடுகள் தம்மை வல்லரசாக நிலைநிறுத்திக் கொள்ள அனைத்து வல்லமைகளையும் காட்டி வருகின்றன.
ஒரு காலத்தில் ரஸ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீயா நானா என்ற போட்டி நிலவியது.அன்று இருநாடுகள் மட்டுமே வல்லரசுக் களத்தில் நின்றன. அதுவும் ரஸ்யாவின் அதிபராக இருந்த குருசேவ்வின் காலத்தில் இந்த வல்லரசுப் போட்டி உச்சம் தொட்டிருந்தது.
இன்று பல நாடுகள் பெரும் வளர்ச்சிகளை அடைந்து வருகின்றன.இன்று உலகை ஆள முற்படும் நாடுகளில் ரஸ்யா, சீனா, இந்தியா,அமெரிக்கா ஆகியவை சமநிலையில் இருந்தாலும்,அந்தச் சமநிலைக்கு அப்பால் பலநாடுகளை ஒன்றிணைந்த பெரும் சாமராஜ்ய வல்லரசாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியமே.
இந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றைய வல்லரசுகளுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது.பின்லண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடாகும்.இந்த நாடு ரஸ்யாவின் எல்லைநாடு.
ரஸ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த போது அதனை எதிர்த்த நாடுகளில் பின்லண்ட் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைவுக்கூடான ரஸ்யாவை எதிர்க்கின்ற எதிர்ப்புக்கப்பாலும் மிகவும் துணிச்சலுடன்,தனிப்பட்ட ரீதியிலம் தனது அண்டை நாடென்பதற்கப்பால் எதிர்ந்து வந்தது.அத்துடன் நேட்டோவுடன் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டும் வந்தது.
பின்லண்டின் அதிபராக இருப்பவர் 36 வயதான சன்னா மரியா என்ற இளம் பெண்.ரஸ்யாவுக்கெதிரான இவருடைய உறுதியான முடிவுகளால் ரஸ்யா மிகுந்த ஆத்திரமடைந்திருந்தது.
தன்னைவிட்டு விலகிய உக்ரைன் தனக்கருகான நாடாக இருந்து கொண்டு நேட்டோவுடன் சேருவதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டமையை வன்மையாக எதிர்த்த ரஸ்யா பினலண்டின் மீதும் போர் தொடுக்கும் எண்ணத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தாவிட்டாலும் அப்படியொரு எண்ணத்தை ரஸ்யா கொண்டிருந்து உண்மைதான்.
தனது எண்ணத்தை பின்லண்ட் நாட்டிற்குள் உளவுத்துறை செய்தியாக கசியவிட்டு பின்லண்டை மிரட்டும் முயற்சியில் பின்லண்ட் எல்லையில் தனது இராணுவத்தை குவித்தும் வைத்திருக்கின்றது.
பொதுவாக சமூக அமைப்புகளில் தலைமைத்துவம் தாங்கும் பெண்களுக்கு எதிராக அவர்களின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளில், எதுவுமில்லாத ஒன்றை எடுத்து மக்கள் மத்தியில் பரவச் செய்து அவர்களின் கண்களை அகல வைத்து சிந்தiனையை மாற்றி மூளைச்சலவை செய்வது போல அரசியலில் பெரும் சக்தியாக இருக்கும் பெண்களில் நாடுகளின் அதிபர்களாக இருக்கும் பெண்கள் மீதும் அவதூறுகளைப் பரப்புவதில் எதிர்ப்பு நாடுகள் தமது உளவு அமைப்புகள் ஊடாகச் செயல்பட்டு வருகின்றன.
அது போன்று பின்லண்ட் நாட்டுக்கே அவமானம் என்பது போல சன்னா மரினாவுக்கு எதிராக ஒரு செய்தியை ரஸ்யா தனது உளவு அமைப்பு மூலம் பரப்பி வருகின்றது.
உக்ரைன் போரில் உக்ரைன் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து தனது கருத்தை வெளியிட்டவர் பின்லண்ட் பிரதமர் சன்னா மரின்.
அவரை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற வேண்டுமென்பதற்காக எடுத்த முயற்சிகளில் ஒன்றே அவர் தோழிகளுடன் நடனமாடினார் என்பதும்,நடனமாடிய
பேர்து போதைப் பொருளைப் பயன்படுத்தினார் என்ற குற்றசாட்டை ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொணர்ந்தமையுமாகும்.
பின்லண்ட் பிரதமமந்திரி போதைப் பொருளைப் பயன்படுத்தவில்லை என்பதை மருத்துவப் பரிசோதனை ரீதியாக அவர் அதனை நிரூபித்துள்ளார்.
அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டாக அவரும் பங்கு கொண்ட விருந்தொன்றில் அவரின் தோழிகள் இருவர் மேலாடையின்றி இருந்தார்கள் என்பதற்காக பின்லண்ட மக்களிடம் அவர் பொது மன்னிப்பும் கேட்டுள்ளார்.
பின்லண்ட் பிரதமரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை பாரதூரமாக்கி அவரை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற வேண்டமென்பதில் ரஸ்ய அதிபர் முனைப்புடன் செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிகின்றது.
தனது சொல்லைக் கேட்கும் நாட்டுத் தலைவர்களை தமக்கொத்து இசைவான நாடுகளில் பதவியில் அமர்த்த வேண்டுமென்பதில் பல வல்லரசு நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் அதே வேளை பின்லண்ட் பிரதமர் போன்ற ஆளுமை உள்ளவர்கள் தமது தனிப்பட்ட நடவடிக்கைகளைக்கூட தமக்கருகில் இருப்பவர்கள்கூட உளவு பார்ப்பார்கள் என்பதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
சுன்னா மரினை உளவு பார்த்தவர்கள் அவரின் தோழிகளாகக்கூட இருக்கலாம்.ஏனெனில் தமது தோழி ஒரு நாட்டின் பிரதமர் என்பதைத் தெரிந்த அவர்கள்,அவர் கலந்து கொண்ட விருந்தில் மேலாடை இல்லாத தங்கள் படத்தை பொதுவெளிக்கு கொண்டு வருவது தவறு என்பதுகூடத் தெரியாமலா இருந்திருப்பார்கள்.
![]()