சங்கமம்

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட இறுதி போட்டி

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றிப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (திங்கட்கிழமை) பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது கோல்டன் பிறதர்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் ஈகிள் விளையாட்டு கழகங்கள் இறுதி போட்டியில் போட்டியிட்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் நாகராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *