உளவு நிறுவனங்கள்!…. (தொடர்:30)….. மௌனஅவதானி.

ஒரு நாட்டினைச் சீரழிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றான உற்பத்திச் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களை தூண்டிவிடுவதிற்கு உளவு நிறுவனங்கள் பெரும் காரணமாக இருக்கின்றன.
தொழிலாளர்கள் தமது வாழ்வாதரத்திற்கு போதுமான வருவாயையோ அல்லது செய்யும் தொழில் சார்ந்து,அவர்களுடைய உடலுக்கான பாதுகாப்புச் சாதனங்களையோ பெறுவதில் தொழிற்சாலையொன்றின் அசமந்தப் போக்கு காரணமாயின் அதனையும் சேர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவார்கள்.
உளவு நிறுவனங்களை வைத்திருக்கும் நாடுகள், தாமே உலகளவில் முதன்மை நாடாக இருக்க வேண்டுமென்பதற்காக பலவேறுபட்ட நாசாகார சூழ்ச்சிகளைச் செய்யத் தயங்கமாட்டார்கள்.
இன்றைய நவீன உலகத்தில்தான் இத்தகு உளவு நிறுவனங்களின் திட்டமிட்ட சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றில்லை.
உலக நாடுகள் எங்கும் மன்னர் ஆட்சி காலங்களிலிருந்தே உளவு நிறுவனங்கள் அந்தந்த நாடுகளுக்குள் ஊடுருவி, அந்தந்த நாட்டு அரசாங்கங்களை பலவீனப்படுத்தி தமது அதிகாரத்தையும் ஆட்சியையும் நிலைநாட்டியிருக்கின்றன.
இந்தக் கட்டுரையின் ஆரம்ப தொடர்களில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இன்று உலகம் வணிகமயப்படுத்தப்பட்ட பொருளாதாரக்; கட்டமைப்பிலேதான் பெரிதும் தங்கியிருக்கின்றது.பண்டமாற்று பொருளாதாரக் கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விட்டகன்ற போது பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், இன்று போல் வகைதொகையாக இருந்ததில்லை.
அதனால், தங்களுக்குத் தேவையான பொருட்களை தங்களுடைய நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியாது என நினைத்த நாடுகள் தமது மக்களுக்கு அன்றாட வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை அதிக விலை கொடுத்தேனும்; வாங்க வேண்டிய கட்டாயத்திலிருந்தன.
ஆனால் பல நாடுகள் மக்களின் அன்றாட வாழ்வுக்கு தேவையான உணவு மற்றும் ஆடம்பரப் பொருட்களை தமது நாட்டிலேயே உற்பத்தி செய்தன.
உணவுப் பொருட்கள் என்றால் அவை விவசாயத்தையும், பயிர்ச் செய்கைகளையும், கால்நடை வளரப்பினையும், கோழி போன்ற பறவையின வளர்ப்பினையும், மீன்பிடித் தொழிலையும் பின்புலமாகக் கொண்டவையாகும்.
இதுவரையும் ஒரு நாடு தனது மேற்கண்ட பொருட்களை ஏற்றுமதி செய்து வருகையில் அதே பொருட்களை, எந்த நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ததோ
அவற்றை நிறுத்திவிட்டு,தனது நாட்டிலேயே படிப்படியாக உற்பத்தி செய்கையில், ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நாடுகளால் அவற்றை சீரணிக்க முடியாதிருக்கும்.
எந்த ஒரு நாடு தனக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முனைகிறதோ அந்த நாடு இறக்குமதி செய்யும் நாட்டிடம் எதிர்பார்த்து நிற்றல் என்ற இயலாமைக்குள் தள்ளப்பட்டு விடும்.
இந்த நிலையில் பலம்பொருந்திய வலல்லரசு நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த நாடுகள் அதனை நிறுத்தியவுடன் அந்த நாடுகள் தனது பொருட்களை இறுக்குமதி செய்து நிறுத்திய நாடுகளை பகை நாடுகளாக வரித்துக் கொள்வதுடன் அந்த நாட்டினை சீரழிப்பதற்காக அனைத்து முனைகளிலுமிருந்து தனது சதி வேலைகளை ஆரம்பிக்கும்.
வல்லரசு நாடுகளின் முதன்மை உற்பத்தியான ஆயுத உற்பத்தியிலிருந்து அனைத்து உற்பத்திகளையும் செய்த நாடுகளின் வருவாய்ப் பொருளாதாரத்தில் தங்கியிருக்கும் நாடுகளின் வருவாய் குறையும் போது அதனுடைய பாதக விளைவுகள் யாவும் மக்களுடைய அன்றாட வாழ்வில் தாக்கத்தையும் அரசியல் குழப்பங்களையும் ஏற்படுத்தும்.
இதன் காரணத்தால் வல்லரசு நாடுகள், ஒரு நாட்டினுடைய அனைத்துக் கட்மைப்புகளையும் சிதைக்கத் தீர்மானித்து உளவு நிறுவனங்களைப் பயன்படுத்தும்.உளவு நிறுவனங்கள் ஒற்றர்கள் மூலம் தமது சூழ்ச்சிப் பணிகளை செயல்படுத்தத் தொடங்கும்.
விவசாயம், பயிர்செய்கை போன்றவற்றினால் பெறப்படும் உணவுப் பொருட்களின் தொடர்ச்சியான விளைச்சலுக்கு தேவையான விதை வகைகளையோ கிழங்கு வகைகளையோ விவசாயிகளே உற்பத்தி செய்வதைத் தடுத்து தம்மைச் சார்ந்து இருக்க வேண்டுமென்பதற்காக, தமக்குச் சார்பாக இருக்கும் நாடுகளை வல்லரசு நாடுகள் பயன்படுத்தத் தொடங்கும்.
இதுவரையில் ஒரு பயிரிலிருந்து சராசரியான பலனைப் பெற்றுவந்த விவாசாயிக்கு, ஒரு பயிரிலிருந்து மிதமிஞ்சிய பலனைக் கொடுக்கும் விதைகளையோ, கிழங்கு வகைகளையோ,செடி வகைகளையோ அறிமுகப்படுத்தி விவசாயிகளையும், பயிர்ச்செய்யாளர்களையும் அதில் ஆர்வம் கொள்ள வைத்து அவற்றை வாங்க வைத்துவிடுவார்கள்.
அவற்றை வாங்குபவர்களால் பயிரிலிருந்து அதிகளவு பலனைப் பெறலாமன்றி அவற்றினின்று விதைகளையோ,கிழங்கு வகைகளையோ, செடி வகைகளையோ பயன்படுத்த முடியாதவாறு மரபணு மாற்றல் என்ற இயற்கை மறுப்பு உற்பத்தியாக விஞ்ஞான ரீதியில் மாற்றப்பட்டிருக்கும்.
அதே வேளை அதிக உற்பத்தியை பெற வேண்டுமெனில் தம்மிடமிருந்தே இரசாயண பசளைகள், பூச்சிகொல்லி மருந்தினையும் வாங்க வேண்டுமென்ற சூழ்நிலைக்குள் விவசாயிகளையும் பயிர்ச் செய்கையாளர்களையும் உளவு நிறுவனங்கள் கொண்டு வந்துவிடும்.
இவற்றை அறிமுகப்படுத்துபவர்கள் அத்துறைசார் தகைமை வாய்ந்த ஒற்றர்களாகவே இருப்பார்கள்.
அதைப் போலவே தொழிற்சாலைப் போராட்டங்கள் மூலம்,உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மற்றைய நாடுகள் அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத நிலை என இவை யாவும் தொழிற்சாலைகளால் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில்,அரசாங்கத்துக்கு நெருக்குவாரம் ஏற்படும்.
மக்கள், தொழிலாளர்கள்,தொழிற்சாலை முதலாளிகள் என்ற முப்பிரிவினரையும் அவர்களுக்கு ஏதுவான வழியில் சமநிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் எதிர்பார்த்தளவு வெற்றியடையாத போது அரசு தொழிற்சாலைகளுக்கு மானியங்கள் வழியாக உதவி செய்ய முனையும்.
அதுவும் தோல்வியடையும் போது, இதுவரையில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்களை வேறு நாடுகளிலிருந்து மலிவான விலைகளில் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக,தமக்குத் தேவையான பொருட்களின் தொகைகள் விலைகள் போன்றவற்றை குறிப்பிட்டு ரெண்டர் கோரப்படும்.
தமது வியூகத்திற்குள் கொண்டுவரபப்பட வேண்டுமென்ற எண்ணத்துடன் செயல்படும் நாடுகள் தமது ஆதரவு நாடுகள் ஊடாக மலிவான விலைக்கு பொருட்களை கொடுக்க சம்மதிப்பார்கள்.
ஒரு நாட்டின் குடிமக்களில் எண்பது வீதமான மக்கள் நடுத்தர மக்களே.அவர்களின் வருவாய்க்கு ஏற்ற விதத்தில்தான் அவர்கள் மலிவான பொருட்களையே வாங்குவார்கள்.
தனது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருளை வாங்கும் விலையிலும் பார்க்க மலிவான விலையில் ஒரு பொருள் கிடைக்குமானால் அதனையே சராசரி மனிதன் வாங்குவான்.
ஒரு நாட்டில் இருக்கும் எண்பது வீதமான நடுத்தர மக்களிடம் தனது பொருளை மலிவான விலையில் விற்கும் வணிக தந்திரமே இதுவாகும்.
அதாவது விலைகூடிய பத்துப் பொருட்களை இருபது வீத வசதியான மக்களுக்கு விற்று இலாபம் ஈட்டுவதைவிட, எண்பது வீத மக்களுக்கு அதே மலிவான பொருளை விற்று அதிக இலாபத்தை பெற முடியும்.
மக்களுக்கு மலிவான பொருள் கிடைத்தல் மூலம் தாமும் அதே பொருளை வைத்திருக்கிறோம் என மக்கள் தம்மைத் திருப்திப்படுத்திக் கொள்வர்.
மக்களை தமது ஆதரவாளர்களாக மாற்றுவதில் உளவு நிறுவனங்கள் வெற்றியடையும் போது,வல்லரசு நாடுகளின் உறுதியான கால் பதித்தல் சுலபமாகின்றது.
மக்கள் என்பவர்களே ஒரு நாட்டினுடைய பெரும் செல்வமாகும்.முன்னைய பகுதிகளில் இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களில் மக்களுக்கு நோயை
ஏற்படுத்தும் கிருமிகளை திடநிலையில் மிகவும் நுணுக்கமாக கலந்துவிடுதல் பற்றியும்; குறிப்பிட்டிருந்தேன்.
நோயற்ற ஆரோக்கியமான மனிதர்களிடமிருந்தே,ஆரோக்கியமான மனிதர்கள் உருவாகுவார்கள்.மருத்துவ ரீதியாக மரபணுக் காத்திரம் மிகவும் முக்கியமாகின்றது.
நோயற்ற சமூகத்தை உருவாவதற்கு ஆரோக்கியமான ஆண் விந்தும் , ஆரோக்கியமான பெண் விந்தும் முக்கியமாகின்றது.
இந்த இரண்டுமே ஆரோக்கியமான மரபணுக்களை தொடர்நிலையில் வைத்திருக்கின்றது.ஆண் விந்திலும்,பெண் விந்திலும் நோய் ஏற்படுமாயின் அது பரம்பரையைப் பாதிக்கும், ஆரோக்கியம் நலிவுற்ற சமுதாயத்தை உருவாக்கும்.
கணவன் மனைவி என்ற கட்டமைப்பினை எடுத்துக் கொண்டு கவனித்தால்,அவர்கள் தமக்கான வாரிசுகளை இருவரும் இணைந்த உடலுறவு மூலமே உற்பத்தியாக்குகிறார்கள்.
உடலுறவின் போது கணவனிடமிருந்து வெளிப்படும் விந்துந்தலில் அவன் தனது விந்தில் குறைபாடுகளிருப்பின்கூட அதை அவன் உணராத வகையில் உடலுறவு மகிழ்ச்சியைப் பெறுவான்அதே போல மனைவியும் உடலுறவு மகிழ்ச்சியை ஒரு பெண்ணிற்கே உரிய நிலையில் பெற்றுவி;ட்ட போதிலும் அவளின் கருப்பை முட்டைகளின் வீரியக்குறைவை அவளால் உணர முடியாது.
பிறக்கப் போகும் பிள்ளையின் ஆரோக்கியமே அதனை வெளிப்படுத்தும்.உளவு நிறுவனங்கள் ஆணின் விந்திலும் பெண்ணின் கருமுட்டையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியை நுண்கிருமிகளைப் பரப்புதல் என்ற நடவடிக்கை மூலம் கையாளும்.
நுண்பெருக்கியால் மட்டுமே பார்க்கக்கூடிய கிருமிகளைஒரு நாட்டுக்குள் பரவவிடுகின்ற சூழ்ச்சினையும் வல்லரசு நாடுகள் உளவு நிறுவனங்கள் மூலம் செய்து வருகின்றன.
வல்லரசு நாடுகளால் இவை தொடர்ச்சியாக ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்கிருமிக் காவிகளாக சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் பல நாடுகளுக்கு வல்லரசு நாடுகள் அனுப்பி வைக்கின்றன.
மனிதர்களிடமிருந்து சுவாசிக்கும் போது வெளிப்படும் கரியமிலவாயு என்ற காற்றிலிருந்து தொற்றக்கூடிய நுண்கிருமிகளை உற்பத்தி செய்யும் பேரபாயமான போர்முறையையும் வல்லரசு நாடுகள் உளவு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்துகின்றன.
நுண்கிருமிகளை பரப்புவர்களாக வருவபவர்களுக்கே தெரியாதவாறு அவர்களுக்கு தொற்றுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
நுண்கிருமிக் காவிகளானவர்கள் விமான நிலையங்களுக்;கு சென்று அங்கு பிரயாணங்களை மேற்கொள்வோர் மத்தியில் இருமியோ, தும்மியோ பரப்பி விடுகிறார்கள்.
(தொடரும்)
![]()