சங்கமம்

இறால் உணவுடன் ஒப்பிட்டு ராஸ் டெய்லருக்கு ஷேவாக் கூறிய பேட்டிங் அறிவுரை – சுயசரிதை புத்தகத்தில் ருசிகர தகவல்

இறால் உணவை ருசித்து சாப்பிடுவதுடன் ஒப்பிட்டு ஷேவாக் கூறிய வித்தியாசமான பேட்டிங் அறிவுரையை நியூசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தனது சுயசரிதை புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், தான் கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை ‘பிளாக் அண்ட் ஒயிட்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார்.

அதில் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய போது சந்தித்த சில அனுபவங்களை சுவைப்பட எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடினேன். ஒரு நாள் இரவு டெல்லியில் உள்ள ஷேவாக்கின் ஓட்டலுக்கு சென்றோம். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அங்குள்ள மெகா திரையில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் இறுதி சுற்றை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த ஓட்டலில் உணவு மிக அருமையாக இருந்தது, அதிலும் இறால் உணவு தனிச்சுவை. நான் அவற்றை வெளுத்து கட்டினேன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *