சங்கமம்

கேலோ இந்தியா யு-16 மகளிர் ஹாக்கி லீக் – ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடக்கம்

கேலோ இந்தியா 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஹாக்கி லீக் டெல்லியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி யு -16 மகளிர் ஹாக்கி லீக் முதல் கட்ட போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறுகிறது . இந்த ஆண்டின் தொடக்கத்தில், லக்னோவில் மூன்று கட்டங்களாக கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் (யு -21) 21 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *