சங்கமம்

உலக போட்டி: வெண்கலம் வென்ற இன்ஸ்பெக்டர்

உலக போலீஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பெங்களூரு பொம்மனஹள்ளி இன்ஸ்பெக்டர், ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக போலீஸ் விளையாட்டு போட்டிகள், நெதர்லாந்து நாட்டில் கடந்த மாதம் 22 முதல் 31 வரை நடந்தது. இதில், பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் பிரசாந்த், 40 பங்கேற்றார். இவர் ஒற்றையர் டென்னிசில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இப்போட்டியில் பங்கேற்க கர்நாடகாவில் இருந்து தேர்வான ஒரே ஒரு போலீஸ்காரர் இவர் மட்டுமே. பதக்கத்துடன் பெங்களூரு திரும்பிய இன்ஸ்பெக்டருக்கு சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *