சங்கமம்

ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி படையல் விழா

கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அசைவ விருந்தும் சமைத்து பரிமாறினர்.

ஆடி படையல் விழா

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோவிலில் கல்லு படையல் ஆண்டுத்தோறும் ஆடி மாதம் நடைபெறும். இந்த ஆண்டும் ஐந்துமுளி சுவாமி ஆடி கல்லு படையல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 கிடாய் மற்றும் 800 சேவல்கள் கோவில் அருகே பலியிடப்பட்டது. இந்த படையலின் சிறப்பு அம்சம் 3 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டு பலியிடப்பட்ட கிடாய், சேவல்களை சுத்தம் செய்து அடுப்பில் மண் கலயத்தில் உப்பு, வேப்ப இலைகள் போட்டு சமைப்பார்கள்.

அசைவ விருந்து

பின்னர் அந்த அசைவ உணவை, கோவிலின் முன்பு சுவாமிக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வார்கள். படையல் நிகழ்ச்சியில் பக்கத்து ஊரில் இருந்து வரவழைக்கப்பட்ட இஸ்லாமியர் சிறப்பு தொழுகை அதாவது சர்க்கரை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். படையல் பூஜைகள் முடிந்த பின்னர் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அசைவ விருந்தில் கலந்து கொள்ளலாம். இதில் உப்பு, வேப்பிலைகளால் மட்டுமே சமைக்கபட்ட கறிமட்டுமே பரிமாறப்படும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *