சங்கமம்

தேசிய தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் ஒளியூட்டு… எங்கே? எப்போது?

சிங்கப்பூரில் தேசிய தினத்தை முன்னிட்டு பிராஸ் பாசா (Bras Basah), பூகிஸ் (Bugis) வட்டாரத்தில் உள்ள வரலாற்று, கலாசாரச் சிறப்புமிக்க 6 கட்டடங்கள் ஒளியூட்டப்படுகின்றன.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை 3ஆவது ஆண்டாகத் தேசிய தின ஒளியூட்டு நடத்தப்படுகிறது.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், Cathedral of the Good Shepherd தேவாலயம், மத்தியத் தீயணைப்பு நிலையம், The Cathay திரையரங்குக் கட்டடம், தேசிய வடிவமைப்பு நிலையம், Stamford கலை நிலையம் ஆகியவை அந்த 6 கட்டடங்கள்.

அவற்றில் நான்கு இடங்கள் தேசிய நினைவுச் சின்னங்கள்.

அவை சிங்கப்பூரின் தேசிய அடையாளத்தை நினைவூட்டுவதோடு கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தலைமுறைகளை ஒருங்கிணைக்க வகை செய்கின்றன என்று தேசிய மரபுடைமைக் கழகம் கூறியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *