உளவு நிறுவனங்கள்!…. (தொடர் 28)>>>>மௌனஅவதானி.

ஒரு நாட்டுக்குள் உளவு நிறுவனங்கள் எந்த அடையாளத்துடன் ஊடுருகின்றன என்பதைக் கண்டறிவது கடினம்.
நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளாக உளவறிதலுக்கு பல நுண்மையான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகளாக,பொருளாதார ஒப்பந்தகாரர்களாக,கல்வியாளர்களாக, மதத்தை பரப்புபவர்களாக,தூதரகங்கள் எனப்பல தோற்றங்களில் உளவு நிறுவனங்கள் ஒரு நாட்டுக்குள் ஊடுருவுகின்றன.
வல்லரசு நாடுகளின் அத்தனை பலமான கட்டமைப்புகளைக் கொண்ட நாடு, தனது நாட்டுக்குள் நுழையும் ஒவ்வொருவரையும் அவருக்குத் தெரியாமலே அவரைக் கண்காணித்த போதும் இத்தகைய நாட்டுக்குள்கூட நவீன விஞ்ஞானத்தின் துணை கொண்டு உளவு நிறுவனங்கள் ஒற்றர்களைக் கொண்டு அந்த நாட்டின் அனைத்து கட்டமைப்பும் எதில் தங்கியிருக்கின்றது என்ற அத்திவாரத்தை கண்டறிகின்றன.
அதே வேளை வளராத நாடுகளுக்குள்ளும், வளர்ந்து பின் வீழ்ந்த நாடுகளுக்குள்ளும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்குள்ளும் மிகவும் இலகுவாக உளவு நிறுவனங்கள் நுழைந்துவிடுகின்றன.
ஒற்றர்கள் வைத்திருக்கம் நவீன உளவுக்கருவிகள் வெளிப்பார்வைக்கு அனைவரும் பாவிக்கும் கைத்தொலைபேசிகள் போன்றும்,சாதாரண பேனாக்கள் போன்றும், சாதாரண மூக்குக் கண்ணாடிகள் போன்றும் தோற்றமளித்தாலும் அவை ஒற்றர்களைத் தவிர வேறு எவருக்குமே அறிந்து கொள்ள முடியாதவாறு அதனுடைய இன்றைய நாளுக்கான இறுதி நவீன தொழில்நுட்பத்தை அவை கொண்டிருக்கும்.
இந்த தொழில்நுட்பத்தின் நிழலைக்கூட தரிசிக்காத மேற்கூறிய நாடுகளுக்குள் இவை இலகுவாக நுழைந்துவிடுவது மட்டுமல்ல,இத்தகு நாடுகளிடம் உளவுநிறுவனங்கள் பயன்படுத்தப்படும் கருவிகளின் தொழிற்பாடு என்ன என்பதைக்கூட கண்டறிய முடியாத கருவிகளே இவர்களிடம் இருக்கும்.
இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் அதிஉச்ச தகவல்களை அறியும் கருவிகளாக இருப்பவை சாதாரண பேனாக்கள் போன்று இருக்கும் ஆனால் அவை மிக வல்லமை பொருந்திய ஒலி-ஒளிவலையமைப்பைக் கொண்டவையாக இருக்கும்.
அதே போல மூக்கண்ணாடியுமாகும். பேனாவையோ மூக்குக் கண்ணாடியையோ எப்படித்தான் உருட்டிப் புரட்டிப் பார்த்தாலும் அதனுடைய தொழில்நுட்பத்தைக் கண்டறிவது மிக மிகச் சிரமமானது.
ஒரு நாட்டுக்குள் நுழையும் நுழைவாசல்களாக இருக்கும் தரைவழி நுழைவாசல்கள்;, ஆகாயவழி நுழைவாசல்கள், கடல்வழி நுழைவாசல்கள் ஆகியவற்றில் எவ்வளவுதான் பரிசோதித்தாலும் அதன் தொழில்நுட்பத்தைக் கண்டறியவே முடியாது.விமான நிலையங்களில் அதிதொழில்நுட்பத்துடன் கூடிய ஊடுகதிர்(Scanning equipment) இருந்த போதிலும் அவற்றில் உளவு நிறுவனங்களின் ஒற்றர் வேலைக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும்தொழில்நுட்பத்தை கண்டறியேவே முடியாது.
ஏனெனில் விமானநிலையங்களிலோ அல்லது தரைவழி பரிசோதனை நிலையங்களிலோ அல்லது துறைமுகங்களில் உள்ள பரிசோதனை நிலையங்களிலோ இருக்கும் ஊடுகதிர் கருவியின் தொழில்நுட்பத்தை அறிந்து அதனையும் மீறிய தொழில்நுட்பத்தையெ உளவு நிறுவனங்கள் கொண்டிருக்கும்.
நலிந்த நாட்டுக்குள் நிலை கொண்டிருக்கும் வல்லரசு நாடுகளின் தூதரகங்கள் அந்த நாட்டுக்கு உதவி செய்வது போல பாசாங்கு செய்தாலும் அத்தகைய நாடுகளை வளரவிடாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும்.
நலிந்த நாடுகளிலும்கூட நவீன அரசியல்வாதிகள் தோன்றி தமது நாட்டை முன்னேற்ற வேண்டுமென எண்ணி தமது நாட்டில் இருக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்துவார்கள்.
இரண்டு பிரதான வளங்களாகப் பார்க்கப்படுபவை விவசாயமும்,தொழிற்சாலை சார்ந்த உற்பத்திகளுமே.
தமது பொருட்களை மலிவு விலையில் ஏற்றுமதி செய்து தமது நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முயற்சிகளும் தடையேற்றுமளவிற்கு தூதரகங்கள் செயல்படும்.
நலிந்த நாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கைத்தரம் வறுமையுடனும் வறுமைக் கோட்டுக்கு கீழுமேயிருக்கும்.இத்தகு நாடுகளில் மிகக்குறைந்த வருவாயைப் பெறுபவர்களே அதிகளவு சனத்தொகையினராக இருப்பார்கள்.
இத்தகையவர்கள் ஊடாக போராட்டத்தை தூண்டிவிடுவது இலகுவானது.தூதரகங்கள் மூலம்,உதவி செய்யும் அமைப்பினராக போராட்டக்காரரருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்பவர்கள் தொழிற்சாலை பற்றிய முழு விபரங்களையும், தொழிலாளர்களின் சங்கங்கள் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொள்வார்கள்.
போராட்டக்காரர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்காக நவீன பேனாக்களும் மூக்குக் கண்ணாடிகளும் பயன்படுத்தப்படுகின்றன.குறிப்பெடுப்பதோ ஒலிப்பதிவு செய்வதோ போராட்க்காரர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதற்காக யதார்த்தமாக உரையாடுவது போல இருந்தாலும் அவர்கள் அணிந்துள்ள
மூக்குக் கண்ணாடி வழியாக அனைந்து விபரங்களும் ஒலியொளி அலைகளாக தூதரகங்களைச் சென்றடைந்து கொண்டேயிருக்கும்.
இன்னும் அதிதொழில்நுட்பமாக உளவு நிறுவனங்களைக் கொண்டிருக்கும் நாடுகளையே சென்றடைந்துவிடும்.
உதவி செய்பவர்கள் உண்மையானவர்கள் என நம்பி போராட்டக்காரரகள் கொடுக்கும் தகவல்கள் மட்டுமல்ல போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் போராட்டக்காரர்களின் மனதில் ஆழமாகவே விதைத்து விடுவார்கள்.
தமது நாட்டு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற தேசிய உணர்வுள்ள அரசியல்வாதிகள் போராட்டக்காரர்களின் விடாப்பிடியான போராட்டங்களால் மிகவும் சங்கடத்துக்குள்ளாவார்கள்.
இது சறுக்குமரத்தில் ஏறி இலக்கைத் தொட வேண்டுமென்பதற்கு ஒப்பானதாகும்.
(தொடரும்)
![]()