பரதநாட்டியம் ஆடிய கலெக்டர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று முன்தினம் கல்லூரி தின விழா நடைபெற்றது. மாணவர்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் கவிதாராமு பங்கேற்றார். அவர் இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில், ”யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட”… எனும் வரியில் நடிகை ஷோபனா நடனமாடும் பாடலுக்கு கலெக்டர் கவிதாராமு நடனமாடினார். அப்போது அரங்கில் இருந்த மாணவ-மாணவிகள் பலத்த குரலுடன் கரகோஷம் எழுப்பினர். பரதநாட்டியம் ஆடிய பின் பதிலுக்கு கலெக்டர் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.

கலெக்டர் கவிதாராமு பரதநாட்டிய கலைஞர் ஆவார். அவர் முறையாக பரதம் கற்று பல்வேறு மேடைகளில் நடனமாடியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் விருதும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட இசைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குருவாக இருந்து தனது முகாம் அலுவலகத்தில் வைத்து பரதநாட்டியமும் கற்றுக்கொடுத்துள்ளார். அந்த வீடியோவை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசு மருத்துவக்கல்லூரி விழாவில் கலெக்டர் கவிதாராமு நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் நேற்று வைரலானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *