கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்…. (தொடர்:25 + 26) ….. தூதரகங்கள் ஒற்றர்களாகவும் இயங்குபவைதான்!….மௌனஅவதானி.

ஒரு நாட்டில் இன்னொரு நாட்டின் தூதரகம் ஏன் தேவை என்ற கேள்வியை முன் வைத்தால் பல விடைகள் புலப்படும்.மன்னர் ஆட்சி காலங்களில் நாட்டுக்கு நாடு தூதுவர்களை அனுப்பியே தத்தமது நிலைப்பாடுகளை மன்னர்கள் தெரிவித்து வந்தார்கள்.தூதுவர்கள் மூலமாக அனுப்பிய செய்திகளில்,நட்பும் இருந்தது, விரோதமும் இருந்தது, பகையும் இருந்தது, போருக்கான முனைப்பினைச் சொல்லும் செய்தியும் இருந்தது, பண்டமாற்று வணிகமும் இருந்தது.

இதுவும் அந்தந்த நாட்டினுடைய பொருளாதாரக் கட்டமைப்பு, படைகளின் வலிமை ஆகியவற்றைப் பொறுத்திருந்தது

இன்று ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு நாட்டு தூதரங்கள் இருக்கின்றன.இவற்றின் பணி என்ன?.பொதுவாக, ஒவ்வொரு நாட்டினுடனும் நல்லிணக்கம், நட்பை மேம்படுத்துவதற்கென்றே சொல்லப்படுகின்றது.

தூதரகங்கள் தாம் எந்த நாட்டுக்கான தூதரகமோ, தாம் பணியாற்றும் நாட்டினுடைய அன்றாட அரசியல்,சமூக,பொருளாதார நிலவரங்களை தமது நாட்டுக்குத் தெரியப்டுத்திக் கொண்டேயிருக்கின்றன.ஏன் அவ்வாறு தெரியப்படுத்திக் கொண்டேயிருப்பதற்குக் காரணம், தூதரகங்களால் அனுப்பப்படும் செய்திகளை அந்த நாடு பலதுறை இராஜதந்திரிகளின் பகுப்புக்கும் கணிப்புக்கும் உட்படுத்தி அதனை தூதரங்களுக்கு அனுப்பி அந்த நாட்டை கையாளுவதற்குரிய சூட்சுமத்தை உத்தரவின் மூலம் தெரியப்படுத்தவே.

ஒரு நாட்டின் பூகோள யல்பு, அங்குள்ள பருவகால நிலைகள்,அந்நாடு தனியொரு இனத்தையும் அவர்களுக்கான மொழி,அந்நாட்டு மக்கள் ஒரு மதத்தை மட்டுமே கடைப்பிடித்தல் அதற்கூடான மொழி சார்ந்தும், மதம் சார்ந்தும்,அவர்கள் கடைப்பிடிக்கும் கலை பண்பாடு சார்ந்தும் அதுவல்லாது ஒரு நாடு பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களையும் பல்வேறு மதங்களைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்து அந்தந்த இனங்களின் மொழி சார்ந்தும் மதம் சார்ந்தும்,இனக்குழுமங்களின் கலை பண்பாடு சார்ந்தும் இவையனைத்தையும் கொண்டுள்ள ஒரு நாடு எவ்வாறு நாளாந்த வாழ்க்கைக்கான ஒவ்வொரு தனிமனிதனையும் தனது நிர்வாகத்திற்கூடாக இணைத்து வைத்திருக்கின்றது என்பதைத் தூதரகங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

ஒரு மனிதனை நிர்வகிப்பதற்கு அல்லது அவனுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அரசியலமைப்பும் பொருளாதாரமும் மிகவும் இன்றியமையாதவையாகும்.

ஒரு தனி இனத்தை நிர்வகிப்பதற்கும் பல்வேறு மொழி, மதம், கலை பண்பாடுகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டினங்களை நிர்வகிப்பதற்கும் மக்களிடையே காணப்படும் இப்பந்தியில் சுட்டியவை பெருந்தடைக்கல்லாகவே இருக்கும்.

அதற்கமையவே ஒரு அரசு மிகவும் புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் எந்த ஒரு இனக்குழுமமும் தாங்கள் மற்ற இனக்குழுமங்களைவிட சமமற்றவர்கள் என்ற ஒரு தவறான எண்ணத்தை வைத்திருக்காதவாறு அரச இயந்திரத்தை இயக்கும்.

இத்தகு நாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக பல்லின மக்களை நிர்வகிக்கும் அரசிடம், அரசு இயந்திரத்தை இயக்குவதில் காணப்படும் தற்செயலான தவறுகளையோ எதேச்சையான தவறுகளையோ உன்னிப்பாக கவனித்து அதையே அந்நாட்டைக் குழப்புவதற்கான வினையூக்கி அம்சமாக (உயவயடலளவ ழக யளிநஉவ)பிரயோகிக்கத் தொடங்கும்.

கடந்த கட்டுரையில் ஒரு நாட்டினுடைய சமகால பொருளாதர நிலவரத்தைத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்ற தொழிலாளர் அமைப்புக்கள்கூட போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு உளவு நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன எனச் சொல்லப்பட்டிருந்தது.

தூதரங்கள் உளவு நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றன என்பதை எவ்விதத்திலும் நிராதகரிக்க இயலாது.நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் தூதரகங்கள் இயங்குகின்றன என்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும்,தேவையேற்படும் பட்சத்திலும் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவி நோக்கியும் ஆலோசனையின் தேவை கருதியும் தம் நாட்டில் இயங்குகின்ற தூதரக இராஜதந்திரிகளை ஒரு நாட்டு அமைச்சின் அமைச்சர்களோ அதிகாரிகளோ சந்தித்து உரையாடும் போது அந்த இராஜதந்திரிகளை நுண்மையாக அந்த நாட்டினுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை எடை போட்டு விடுவார்கள்.

தூதரகங்கள் பல பிரிவுப் பணிகளைக் கொண்டதாக இருக்கையில் அவற்றில் நாட்டைக் கண்காணிக்கும் ஒற்றர்கள் இராஜதந்திரிகள் என்ற பெயர்தாங்கி தேவைக்கேற்ப தமக்கு தமது நாட்டினால் வழங்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேறு;றுவார்கள்.

ஒரு நாட்டினுடைய நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கு அந்நாட்டில் மக்களால் முனனெடுக்கப்படும் ஊர்வலங்கள்,பேரணிகள், போராட்டங்கள் என்பவற்றுக்கு அது மக்களின் சனநாயக உரிமை என்று முலாம் பூசப்பட்டு இவையாவற்றினதும் உண்மையான மூலம் எதுவென கண்டறிவது தவறப்படுகின்றது.

ஒரு போராட்டத்தினை, ஓரு ஊர்வலத்தினை, ஒரு பேரணியை நடாத்தும் போது ஒவ்வொரு தனிமனிதனினதும் அன்றாட வாழ்க்கை நிலைகுலைய வாய்ப்பு ஏற்படுகின்றது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவையிருக்கின்றது.இந்த தேவை நிமித்தமாக அவர்கள் போக்குவரத்துச் சாதனங்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் தரையிலோ ஆகாயத்திலோ கடலிலோ மக்கள் தமது தேவை கருதி பயணிக்கும் போது தமது பயணத்துக்கு தேவையாக இருக்கின்ற பாதைகளில்; நடக்கும்; ஊர்வலங்களால் ஒருவர் தான் குறிப்பிட்ட நேரத்திற்குள் தனது தேவை பூர்த்தி செய்ய முடியாத நிலை தோன்றும் போது அப்பயணி முதலில் காவல்துறையினரையும் அத்துறையை இயக்குகின்ற அரசையும் சாடத் தொடங்குவர்.

இச்சாடல் மனப்பான்மை மக்களிடம் உற்பத்தியாக வேண்டுமென்பதை தூதரக உளவு நிறுவனங்கள் எதிர்பாரத்து நிற்கும்.ஊர்வலங்களால், பேரணிகளால் போராட்டங்களால் அந்த நாட்டுக்குப் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்படுகின்றது.

பெருந்தொகையான காவல்துறையினரின் தேவை, பெருந்தொகையான நகர நிர்வாகிகளின் தேவை போக்குவத்துச் சாதனங்களின் தேவையென வழமைக்கு மாறான தேவைகளினால அவர்களுக்கான அவசரநிலை ஊதியம் அதிகரிக்கின்றது.இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

சில வேளைகளில் இத்தகு போராட்டங்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறுவதும் அரசுடமைச் சொத்துக்கள், தனிமனித சொத்துக்கள் சேதமாக்கப்படுவதும் தீக்கிரையாக்கப்படுவதும் ஒரு நாட்டினுடைய மனிதமன இயல்பினை திரிபுநிலைக்கு உற்படுத்தலையும், பொருளாதாரப் பின்னடைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

தற்செயலாக நடந்த கலவரமாகவும், வன்முறையாகவும் இவை தோற்றப்பட்டாலும்,தோற்றப்பட வைத்தாலுமகூட ஊர்வலங்கள், பேரணிகள்;,போராட்டங்களை ஏற்படுத்தியவர்களும் வன்முறையையும் கலவரத்தையும் ஏற்படுத்தியவர்கள் தூதரகங்களின் ஒற்றர்பிரிவு என்பது சாத்தியமே.

(தொடரும்)

உளவு நிறுவனங்கள் (தொடர் 26)

-மௌனஅவதானி

ஒரு நாட்டினுடைய அரசியல் நிர்வாகமும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படுவதற்கு காரணமாவிருப்பவை உள்நாட்டு கனிம வளங்கள் இல்லாமையும்,விவசாயம் வீழ்ச்சியடைதலும் பொருளாதார உற்பத்திக்கான தொழிற்சாலைகள் இல்லாமையுமே காரணமாக அமைந்து விடுகின்றன.

மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய விவசாயத்தையோ பயிர்ச்செய்கைகளையோ ஒரு நாடு கொண்டிருக்காவிட்டால், உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் அந்த நாடு எங்கிருந்து இறக்குமதி செய்கின்றதோ அந்த நாட்டிடம் கையேந்தி நிற்பது மட்டுமல்ல விலையேற்றங்கள் வரிகள் போன்றவற்றால் பொருளாதாரச் சிக்கலில் சிக்குகின்றது.

விவசாயமும்,பயிர்ச் செய்கையுமே ஒரு நாட்டினுடைய அசைக்க முடியாத வளங்களாhகும்.ஒரு நாட்டின் மண்வளம் நீர்நிலைகள் போன்றவை எப்படி விவசாயத்தையும் தக்க வைத்திருக்கின்றதோ இவையிரண்டும் தவிர்ந்த அனைத்து மற்றைய தேவைகளையும் பொருள் உற்பத்திச் தொழிற்சாலைகள் பூர்த்தி செய்கின்றன.

இந்த உற்பத்திகள் அந்நாட்டு மக்களின் சுயதேவையை பூர்த்தி செய்வதுடன் ஏற்றுமதிக்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்துகின்றது.

விவசாயத்தைப் பொறுத்த வரை முன்பொருகாலத்தில் இலங்கையில்; திருக்கேதீசுவரம் மாதோட்டப் பகுதியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட நெல் இலங்கை மக்களின் தேவை போக இந்தியாவிற்கு ஏற்றமதி செய்யப்பட்டதாக அறிகிறோம்.

ஒரு நாடு தனது நாட்டில் என்னென்ன வளங்களிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தனது மக்களின் மகிழ்ச்சியான நல்வாழ்வுக்கு பயன்படுத்தி, தனது மக்களை மற்றைய நாடுகளுக்கு கடனாளியாக்கமலும் தலைகுனிவு ஏற்படாலும் வைத்திருந்தால் அந்த நாடே செல்வந்த நாடாகும்.

ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ்வதை உறுதிப்படுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் பொருளாதாரம் எத்தகையது என தீர்மானிக்கப்படுகின்றது.

உலக நாடுகளின் பெரும்பாலான நாடுகள் ஒன்றுக்கொன்று நல்லெண்ணம் கொண்டிருப்பது போல வெளிப்படைத் தோற்றம் காணப்பட்டாலும் அந்தந்த நாடுகளின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றின் பொருளாதார அரசியலகட்;டமைப்பை சீரழிப்பதிலேயே அந்தந்த நாட்டுக்குரிய உளவு நிறுவனங்கள் செயல்படுகின்றன.இதை பொருளாதார, அரசியல் பனிப்போர் என விளித்துக் கொள்ளலாம்.

இந்தக் கட்டுமானத்தை சிதைப்பதில் இல்லாத ஒன்றை பூதகரமாக்கி தொழிற்சங்கங்களின் தலைவர் உட்பட அதன் நிர்வாகிகள் எனப் பொறுப்புக் கூறுபவர்களிடம் தொழிலாளர்களின் சம்பளப்பற்றாக்குறை, அவர்களுக்கான தொழிற்சாலை வரப்பிரசாதங்களை அதிகரிக்கச் சொல்லி இத்தகையோரை மூளைச்சலவை செய்வதில் அந்நாட்டில் பணிபுரியும் தூதரகங்கள் இரகசியமாக அதற்கான குழுவின் ஒற்றர்கள்; மூலமாக இயக்குகின்றன

ஒவ்வொரு நாளும் ஒரு நாட்டினுடைய பத்திரிகைச் செய்திகள் தொடக்கம்,அரசுதலைவர், அமைச்சகர்கள், அதிகாரிகள் , மக்கள் வரை அவர்களின் எண்ணப்பாடுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு தூதரகங்கள் தமது நாட்டுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

அந்த நாட்டின் இராசதந்திரிகளே எப்படிப் போராட்டங்களை கையாள வேண்டும் என்பதை தூதரகங்களுக்கு அறிவிக்கின்றனர்.தொழிற்சங்கங்களின் பொறுப்புக்கூறலில் இருக்கும் நிர்வாகிகளை நட்புக் கொண்டு அவர்களை விடுதிகளுக்கு அழைத்து தமது நோக்கத்தைக் கூறி, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போன்று பணம், பொருள், பெண் என எதைக் கொடுத்தால் அவர்களைத் தமது வலையில் வீழ்த்தலாம்என்பதை அறிந்து அவர்களை உளவு நிறுவன ஒற்றர்கள் சிலந்தி வலையில் சிக்க வைப்பது போல வைத்து விடுவார்கள்.சிக்கியவர்கள் அதிலிருந்து மீளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.

பேரணிகளும் ஊர்வலங்களும் நடைபெறத் தொடங்கும் அதே வேளை தொழிற்சாலை நிர்வாகத்தை அணுகும் உளவு நிறுவன ஒற்றர்கள் தொழிலாளிகளுக்கு எவ்விதமான சம்பள உயர்வோ தொழிற்சாலை வரப்பிரசாதங்களோ கொடுக்கத் தேiவை இல்லை என்று ஆலோசனை வழங்குவார்கள்.உளவு நிறுவனங்களின் இச்செயல்பாடானது ஒரு சிறு பொறியைப் பஞ்சுத் தொழிற்சாலைக்குள் எறிந்தது போன்றாகின்றது.

இத்தகு ஆலோசனை வழங்குவதற்கென்றே பல்துறைக் கல்விநிலைகொண்ட அறிஞர்கள் இருப்பார்கள்.பெரும்பாலும் சுதேச அறிஞர் ஒற்றர்களையே தூதரகங்கள் பயன்படுத்தும்.தனது நாட்டின் மீதான தேசப்பற்று இல்லாத துறைசார் அறிவைக் கொண்டிருப்போர், உளவு நிறுவனங்களின் தொடர்பாளர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்துவிடுவார்கள்.

தொழிற்சாலை நிர்வாகமும் தொழிற்சங்க நிர்வாகமும் முரண்பட்ட நிலையில் பேரணிகளாகவும் ஊர்வலங்களாகவும் அது அமையும் போது வன்முறைக்கான சாத்தியத்தையும் தூதரக உளவு நிறுவனங்கள் ஒற்றர்கள் மூலமாக ஏற்பாடு செய்வார்கள்.

ஊர்வலங்கள் நடைபெறும் போது விசமிகளும் கலந்து கொண்டு தொழிற்சங்க விசுவாசிகள் போல கோசம் எழுப்புவதுடன் உணர்ச்சிவசப்பட்டது போல நடித்து அரச சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும், பொதுச் சொத்துக்களையும் நொறுக்கியும் எரித்தும் சேதப்படுத்துவார்கள்.

அரச சொத்துக்களோ, பொதுச் சொத்தக்களோ தனியார் சொத்துக்களோ அவை எதுவாக இருந்தாலும் அவை அந்த நாட்டினுடைய சொத்துக்கள் மட்டுமல்ல அவை செல்வமுமாகும்

அழிக்கப்பட்ட சொத்துக்களை மீளமைப்பதற்கு பெருந்தொகை நிதி தேவைப்படுகின்றது.அதே வேளை நடைமுறை அரசின் மீது அதிருப்தியும் அவர்களை அரசிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மக்கள் கொள்ளத் தொடங்கி விடுவார்கள்.

தமக்குச் சாதகமான காலத்தை எதிர்பார்த்திருந்த எதிர்கட்சிகள் அரசுக்கெதிராக செயல்படத் தொடங்குவார்கள்.எப்படியும் ஆட்சியை அகற்றியே தீரவேண்டும் என்று அவர்கள் நாடாளுமன்றப் போர் தொடுப்பார்கள்.

பேரணிகள், ஊர்வலங்கள் என்பன சனநாயக உரிமை என்று கருதும் மக்கள்கூட இவற்றால் தமது அன்றாட வாழ்க்கைக்கு ஏற்படும் குறிப்பாக போக்குவரத்து நெரிசல் தடைகளை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

தொழிற்சாலைகள், தொழிற்சங்கங்கள், மக்கள் என மும்முணைகளையும் உளவு நிறுவனங்கள் மோத வைப்பதன் மூலம் சறுக்கு மரத்தில் ஏறுகின்ற சாண் ஏற முழம் சறுக்குகின்ற நிலையை நாடு அடைகிறது.

விவசாய உற்பத்தி, பயிர்ச்செய்கை, தொழிற்சாலை உற்பத்திகள் என ஒரு நாடு கொண்டிருந்தாலும் இயற்கை அழிவுகள் தவிர்ந்து பிற காரணிகளான பேரணிகள் ஊர்வலங்களால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்ய மக்களின் பணிச் சம்பளத்தை அதிகரிக்கச் செய்யாமலும், அதே நேரத்தில் அதிகரித்த வரி விதிப்பிற்கான இக்கட்டான நிலைமைக்கு அரசு வந்துவிடுகின்து.

உளவு நிறுவனங்கள், விவசாயம், பயிர்ச்செய்கை,மருத்துவம் , கல்வி, உள்நாட்டு கனிம வளங்கள்,போன்றவற்றை சிதைப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கின்றன.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *