சங்கமம்

அம்மனுக்கு திரிசூலம் வழங்கிய தி.மு.க., – எம்.எல்.ஏ.,

அம்மன் கோவிலில் திரிசூலம் திருடு போனதை தொடர்ந்து, திருத்தணி தி.மு.க., – எம்.எல்.ஏ., சந்திரன், தன் செலவில் திரிசூலத்தை நேற்று வழங்கினார்.

திருத்தணி, சுப்ரமணியம் நகர், அம்மன் கோவில் தெருவில், துர்கை கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில், அம்மனுக்கு திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபடுவர்.இந்நிலையில், கடந்த 1ம் தேதி நள்ளிரவில், மர்ம நபர்கள் அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணம் மற்றும் திரிசூலத்தையும் திருடிச் சென்றனர்.

இதையடுத்து, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், சில நாட்களுக்கு முன், திருடு போன அம்மன் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது, கோவில் பூசாரி மோகன், திரிசூலம், கண்காணிப்பு கேமரா பொருத்தி தர வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, முதற்கட்டமாக எம்.எல்.ஏ., சந்திரன், தன் செலவில், பித்தளையால் ஐந்து அடி உயரமுள்ள திரிசூலத்தை புதிதாக செய்து, நேற்று கோவில் பூசாரியிடம் வழங்கினார். விரைவில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தி தருகிறேன் என, எம்.எல்.ஏ., மீண்டும் உறுதி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *