என் கருவும் ஒரு பயணியாகக் கருதப்படவேண்டும்!” – அமெரிக்காவில் கர்ப்பிணி ஓட்டுநர்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் குறைந்தது இருவர் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட பாதையில் தனியாக வாகனம் ஓட்டிச்சென்ற பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, தனது கருவும் ஒரு பயணியாகக் கருதப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
32 வயது பிராண்டி பொட்டோனுக்குச் சென்ற மாதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவர் 34 வாரக் கர்ப்பிணி.
காவல்துறை அதிகாரி அவரது காரை நிறுத்திக் காரில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று கேட்டார்.
அதற்கு பொட்டோன் தமது வயிற்றைக் காட்டினார்.
ஆனால் இன்னும் பிறக்காத பிள்ளையைப் பயணியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் காவல்துறை அதிகாரி கூறியிருக்கிறார்.
அதிகாரியின் முடிவை மறுத்த பொட்டோன் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயார் என்று குறிப்பிட்டார்.
டெக்சஸ் மாநிலச் சட்டத்தின்கீழ் கருவும் ஒரு நபராகக் கருதப்படுகிறது.
ஆனால் அது போக்குவரத்துச் சட்டங்களுக்குப் பொருந்தாது.
அங்குக் கடுமையான கருக்கலைப்புச் சட்டங்கள் நடப்பில் உள்ளன.
![]()