15 வயது சிறுமியை கடத்தி தம்பிக்கு திருமணம் செய்து வைத்த வாலிபர்

மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் வாழப்பாடி அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி மளிகை கடைக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

இதில் தர்மபுரி மாவட்டம் பாகல்பட்டி பகுதியை சேர்ந்த சித்தன் என்பவரது மகன்கள் தேவராஜ் (22), சீனி (21) ஆகியோர் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளனர். இதில் தேவராஜ் அந்த சிறுமியை தனது தம்பி சீனிக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். தொடர்ந்து தேவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தலைமறைவான சீனியை தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *