சங்கதிகள்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ்

நேற்று டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட்1 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் (பாகிஸ்தான்) அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் துணை விமானி பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் தரையிறக்கம் செய்யப்ட்டது என கூறப்படுகிறது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 2 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் கோளாரால் தரையிறக்கம் செய்யப்பட்டன.இந்த நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.விமான பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது என விமான போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *