சங்கதிகள்

வெள்ளத்தில் ராஜ நடை கேக்குதா உனக்கு? இளைஞரை அடித்து வெளுத்த மக்கள்

காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் போது ராஜநடை போட்டு வந்த இளைஞரை பொதுமக்கள் அடிவெளுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வெள்ளம் போன்ற ஆபத்தான நேரத்திலும் ஒருசிலர் சாகச முயற்சிகளிலும் இறங்குவார்கள்.

ஆபத்து நிறைந்த அந்த சாகசத்தின் பின்னணி குறித்து துளியும் ஆராயாமல் விளையாட்டாக சிலர் செய்யும் செயல்கள் ஆபத்தில் முடியவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அப்படி, ஓர் ஊரில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றில் ஓடும் வெள்ளம் பாலத்தைக் மூழ்கடித்து ஆக்ரோஷமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ராஜநடை போட்டுக் கொண்டு ஒரு இளைஞர் நடந்து வருகிறார்

அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கம் வந்ததும், வேடிக்கைப் பார்த்தவர்களில் இருவர், அந்த இளைஞருக்கு பளார் பளார் என அறைவிட்டு சிறப்பாக கவனித்தனர். இதனை அந்த இளைஞர் துளியும் எதிர்பார்க்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *