சங்கதிகள்

கல்விக்கடன் வசூலிக்க சென்ற வங்கி மேலாளருக்கு செருப்படி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கல்வி கடன் வசூலிக்க சென்ற கனரா வங்கி கிளை மேலாளர் நர்மதாவை 32, செருப்பால் அடித்தது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கனரா வங்கி ராஜபாளையம் கிளையில் 2013ல் சம்மந்தபுரம் முருகேசன் 53, மகன் விக்னேஷ் கல்விக்கடன் ரூ.2 லட்சம் பெற்றார். கடனை திருப்பி செலுத்தாததால் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு கிளை மேலாளர் நர்மதா, உதவி மேலாளர் சண்முகப்பிரியா, ஊழியர் சுப்புராஜ் ஆகியோர் முருகேசன் வீட்டிற்கு சென்று கடன் தொகையை கேட்டனர். முருகேசன் தரக்குறைவாக பேசினார்.

அங்கிருந்த 25 வயது நபர் மேலாளர் நர்மதாவை செருப்பால் அடித்ததுடன் மீண்டும் வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்த சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு வடக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *