நோயாளர்களின் அவசர தேவைகளுக்காக சமூக அமைப்புக்களுடன் இணைந்து பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளோம்!

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் றிபாஸ்!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து சிக்கல்கள் இருப்பதனால் சுகாதாரத்துறையினரை வாரத்தில் மூன்று நாட்கள் பணிக்கு அழைப்பது, கடமை நேரத்தில் தளர்வுகளை ஏற்படுத்துவது, தூரத்திலிருந்து பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களுக்கு இலகுவாக சென்றடைய கூடிய இடங்களுக்கு கடமைக்கு சமூகமளிக்க வாய்ப்புக்களை ஏற்படுத்துவது போன்ற நிறைய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
எங்களின் அலுவலகத்தில் கொரோனா காலத்தில் இருந்தது போல சுழற்சி முறையையும் அமுல்படுத்தி இரு வாரங்களில் ஐந்து நாட்களுக்கு மட்டும் கடமைக்கு சமூகமளிக்கும் முறைமையை அறிமுகம் செய்துள்ளோம். இருந்தாலும் நிலைய தலைவர்கள், நான் உட்பட நிறைவேற்று உத்தியோகத்தர்களை எல்லா நாளும் பணிக்கு அழைக்கும் நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.சமகால பொருளாதார நெருக்கடியில் எரிபொருள் பெறுதல் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் தொடர்பில் சுகாதாரத்துறையின் விசேட ஏற்பாடுகள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இங்கு கருத்து வெளியிட்ட அவர், வைத்தியசாலைகளிலும் பணியாளர்களின் இடங்களுக்கு அண்மைய வைத்தியசாலைகளில் பணியாற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்துவதுடன், சுகாதாரத்துறை 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டிய துறை.
![]()