சங்கதிகள்

சர்வதேச யோகா தினம்…. 21.06.2022.

சர்வதேச யோகா தினம் 21.06.2022 அன்று உலகெங்கிலும்  மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் நகரிலும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. என்ற செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

சர்வதேச யோகா தினம்:ஐந்தாயிரம் ஆண்டு பழமையான யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரப்புவதற்காக ஆண்டுக்கு ஒரு நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி 2014 செப்டம்பர் 27 அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கான நாளாக அவர் ஜூன் 21 ஐ  பரிந்துரைத்திருந்தார். அமெரிக்கா, கனடா மற்றும் சீனா உட்பட உலகின் பல நாடுகள் திரு. நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்தன. டிசம்பர் 11, 2014 அன்று, 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21 ஐ ‘சர்வதேச யோகா தினமாக’ அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

சர்வதேச யோகா தின நிகழ்வில் எமது யாழ் வைத்தீஸ்வரா கல்லூரியின் மாணவர்களும் (குறுகிய கால சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு) கலந்து கொண்டனர் என்பது எமக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இவ்விழாவில் எமது மதிப்பிற்குரிய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களும்  கலந்து கொண்டார் என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.

 இத்தருணத்தில் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எமது கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய இந்திய துணைத்தூதுவர் மதிப்புக்குரிய திரு. ராகேஷ் நடராஜ் அவர்களுக்கும் நமது மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் பயிற்சி வழங்கி நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்த எமது மதிப்பிற்குரிய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கிய யோகா பயிற்றுவிப்பாளர் திரு. கோடிஸ்வரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 🤝நன்றி🙏வணக்கம்சு. மாதவன்யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *