சங்கதிகள்

தலையில் தேங்காய் விழுந்ததால் நடுரோட்டில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண்!

மலேசியாவில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் அவர் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவி வருகிறது. புவான் அனிதா என்பவர் சாலையில் தன் மகளுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார்.

ஸ்கூட்டரை அவரது மகள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று கீழே விழுந்தது. அது அனிதாவின் தலையில் காயத்தை ஏற்படுத்தியது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், மயங்கி கீழே விழுந்தார்.

ஸ்கூட்டரை ஓட்டி வந்த மகள் உடனே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அவரிடம் விரைந்தார். அக்கம்பக்கத்தினர் மற்றும் பிற வாகன ஓட்டிகள் அவர்களுக்கு உதவ ஓடி வந்தனர். அனைவரும் சேர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மலேசியாவில் உள்ள பினாங்கு தீவு ஜாலான் தெலுக் கும்பார் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *