வேளாவேளைக்கு நூடல்ஸ்…இனி முடியாது என்று விவாகரத்து கோரும் கணவர்
இதற்குக்கூட மணமுறிவு ஏற்படுமா என்று நினைக்கும் வகையில் ஒரு சம்பவம், இந்தியாவில்.
நம்மில் பலருக்கும் நூடல்ஸ் என்றால் பிடிக்கும். ஆனால் அதையே ஒவ்வொரு வேளையும் சாப்பிட முடியுமா?
இந்தியாவில் ஒரு தம்பதி இந்த நூடல்ஸ் விவகாரத்தால் பிரி்கின்றனர்.
ஒவ்வொரு வேளையும் நூடல்ஸை மட்டுமே மனைவி தருகிறார் என்றும் அதுவும் விரைவுத் தயாரிப்பான ‘கப் நூடல்ஸ்’ என்றும் கணவர் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்.
அல்பமான காரணங்களுக்கு மணமுறிவு கோரும் சம்பவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்ட இந்திய முதன்மை வட்டார நீதிபதி, இந்தியாவின் The New Indian Express நாளேட்டிடம் அது குறித்துத் தெரிவித்தார்.
மனைவிக்கு அதைத் தவிர வேறு ஒன்றும் சமைக்கத் தெரியவில்லை என்பது கணவருக்கு எரிச்சலூட்டியதாக அவர் சொன்னார்.
இருவரும் சம்மதத்தோடு இறுதியில் மணமுறிவு பெற்றனர்.
இதுபோல் அசாதாரண நிகழ்வுகளால் ஏற்படும் மணமுறிவுகள் அதிகரித்திருப்பதாய் அவர் கூறினார்.
மேலும் விநோதமான சில வழக்குகளில்….
மனைவி தட்டில் சரியான இடத்தில் உப்பை வைக்காதது, திருமணத்துக்குச் சரியான வண்ணத்தில் உடுத்தாதது, மனைவியை வெளியில் அழைத்துச் செல்லாதது…இப்படிப் பல.
இவற்றுள் சில பிரச்சினைகள் திருமணம் முடிந்த உடனேயே தொடங்குகின்றன என்றும் கூறப்பட்டது.
இந்தியாவில் அதிகரிக்கும் மணமுறிவுகள் கவலை அளிப்பதாக வட்டார நீதிபதி தெரிவித்தார்.
அவற்றுள் பெரும்பாலானவை நகர்ப்புறங்களில் ஏற்படுவதாக அவர் சொன்னார்.
பெண்கள் நன்கு படித்துப் பணத்துக்கு யாரையும் நம்பியிருக்காத நிலை அதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
![]()