மெட்டாவெர்ஸ் கற்பனை உலகிலும் புகுந்த காமுகர்கள்” இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்

இணைய உலகின் அடுத்த பரிணாமம் தான் மெட்டா வெர்ஸ். மெட்டா யுனிவர்ஸ்என்ற வார்த்தைகளை இணைத்து உருவானதுதான் மெட்டா வெர்ஸ் (. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் கற்பனையான டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பது தான் இதன் அர்த்தம்.

மெட்டாவெர்ஸ் என்ற பதம் முதன்முதலில் 1992ஆம் ஆண்டு நீல் ஸ்டீபன்சன் என்ற எழுத்தாளரின் ஸ்னோ கிராஸ் (Snow Crash) என்ற அறிவியல் கதையில் வெளியானது. மக்கள் தங்களுக்கென அவதார்களை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் மெய்நிகர் உலகம் தான் மெட்டாவெர்ஸ் என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த மெட்டாவெர்ஸ் கோட்பாடு அடிப்படையில் உருவான மற்றொரு நாவல் தான் ரெடி பிளேயர் ஒன்.

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இதனை 2018ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியிட்டிருந்தார். தற்போதுள்ள ரோபிளாக்ஸ் போர்ட்நிட் (Roblox, Fortnite) ஆகிய ஆன்லைன் வீடியோ கேம்களும் மெட்டாவெர்ஸ் அடிப்படையில் உருவானவையே. நாம் இருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றும் ஆக்மெண்ட் ரியாலிட்டி, அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச் செய்யும் விர்ச்சுவல் ரியாலிட்டி. இந்த இரண்டையும் இணைத்து நிஜ உலக மனிதர்களை விர்ச்சுவலாக வாழ செய்யும் இடம் தான் மெட்டாவெர்ஸ்.

தற்போது ஆன்லைன் விளையாட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் இனி,மக்களை தங்களுக்கு பிடித்தமான தோற்றம் கொண்ட அவதார்களை உருவாக்கி மெய்நிகர் உலகில் வாழச் செய்ய போகிறது. தற்போது பேஸ்புக் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் விர்ச்சுவல் விளையாட்டு தளமான ஆக்யூலஸ் ஆகியவற்றை மெட்டாவெர்ஸ் மூலம் இணைத்து புதிய தாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வருவது மார்க் ஜூக்கர்பர்கின் திட்டம். இது சாத்தியப்பட 15 வருடங்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.

இப்போது பேஸ்புக் மூலம் நாம் இதுவரை நேரில் கண்டிராதவர்களுடன் கூட நட்பு பாராட்டுகிறோம் , இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படும் போது மெய்நிகர் உலகில் அந்த நண்பர்களோடு நாம் விளையாடலாம் இசை நிகழ்ச்சிக்கு செல்லலாம். ஆனால் இது மனிதர்களுக்கு இடையிலான நேரடி தகவல் தொடர்பை ரத்து செய்து மனிதர்களை மேலும் தனிமைப்படுத்தும் என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட மெட்டா நெட்வொர்க்கின் மெட்டாவெர்ஸில் தற்போது அதிக சிக்கல்கள் உள்ளன. 43 வயதான பிரிட்டிஷ் பெண் ஒருவர், ஆண் அவதாரங்களின் குழுவால் தான் மெய்நிகர் உலகில் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதாக கூறி உள்ளார். நினா ஜேன் படேல் என்ற பெண், தனது சமூக வலைதளத்தில் தனது அனுபவத்தை எழுதியுள்ளார், அங்கு அவர் மெட்டாவின் ஹொரைசன் வென்யூஸில் மூன்று அல்லது நான்கு ஆண் அவதாரங்களால் “வாய்மொழியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக கூறி உள்ளார்.

எனது அவதாரை பயன்படுத்தி மெட்டாவெர்ஸின் ‘ஹொரைசன் உலகில் உலா வந்து கொண்டிருந்தேன், அப்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு எனது அவதார் திசை தெரியாமல் வேறு எங்கோ சென்றது. அப்போது சில அடையாளம் தெரியாத விர்ச்சுவல் மனிதர்கள், பாலியல் ரீதியாக என்னை தாக்கினர். என் மூளையின் ஒரு பகுதி என்னை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என கூறியது. மற்றொரு பகுதி இது உண்மையான உடல் அல்ல விர்ச்சுவல் உலகம் தான் என உணர்த்தியது என கடும் மன உளைச்சலுடன் கூறினார்.

மேலும் “அது ஒரு மோசமான கனவு. ஆனால் அது நிஜம் போலவே இருந்தது. அந்த ஆண் அவதார்கள் என்னை தகாத முறையில் பேசினார்கள், முறைகேடாக நடந்து கொண்டார்கள், கண்ட இடத்தில் தொட்டார்கள், என் அருகில் இருந்த மற்றொரு பெண்ணின் வாயில் ஓட்காவை ஊற்றினார்கள், இந்த பயங்கரமான அனுபவத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற உடனடியாக மெடாவில் இருந்து வெளியேறி தனது கணக்கை நீக்கிவிட்டதாக அந்த பெண் கூறினார். மெடாவெர்ஸ் குறித்து அந்த பெண் புகார் அளித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மெடாவின் செய்தியாளர், “இப்படி நடந்ததை அறிந்து வருத்தப்படுகிறோம்.

ஹொரைசன் வென்யூசில் இருக்கும் அனைவரும் நல்ல அனுபவங்களைப் பெற வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். மெடாவெர்சில் நண்பர்கள் அல்லாதவர்களுடன் தேவையற்ற தொடர்புகளைத் தவிர்ப்பதை எளிதாக்கும் வகையில், தனிப்பட்ட எல்லை கிட்டத்தட்ட 1 மீட்டர் வரை உள்ளது. மெடாவெர்சில் “பாதுகாப்பான மண்டலம்” என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

பாதுகாப்பான மண்டலம் என்பது ஒரு பாதுகாப்பு குமிழி பயனர்கள் அச்சுறுத்தலை உணரும்போது செயல்படுத்த முடியும். அதற்குள், பாதுகாப்பான மண்டலம் அகற்றப்படுவதை அவர்கள் விரும்புவதாக அவர்கள் தெரிவிக்கும் வரை யாரும் அவர்களைத் தொடவோ, அவர்களுடன் பேசவோ அல்லது எந்த வகையிலும் தொடர்புகொள்ளவோ ​​முடியாது. ஆனால் அவர் இதனை பயன்படுத்தவில்லை என்றார். ஹொரைசன் தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

மேடையில் உள்ள அவதாரங்கள் எளிமையான, கார்ட்டூனிஷ் தோற்றத்தைக் கொண்டுள்ளன. தற்போது மெட்டாவின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹொரைசன் உலகில் 21 வயதான ஆராய்ச்சியாளரின் அவதாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

 

 

Loading