குரங்குகளுக்கு உதட்டுச் சாயம் பூசி, புகைபிடிக்க வைத்த வித்தியாசமான நேரடி ஒளிபரப்பு

சீனாவில் நேரடி ஒளிபரப்பு ஒன்றில் பங்கேற்ற குரங்குகளைப் பல சேட்டைகளைச் செய்யவைத்தனர் அவற்றைப் பேணி வளர்ப்போர்.

குரங்குகளுக்கு அழகான ஆடை அணிந்து, உதட்டுச் சாயம் பூசி அலங்காரம் செய்து ஒளிபரப்பு அறைக்கு அழைத்துச் சென்றனர் அவர்கள்.

நேரடி ஒளிபரப்பின்போது பிள்ளைகள் போல குரங்குகளைப் பார்த்துக்கொண்டனர் அவற்றைப் பராமரிப்போர்.

ஒரு சில குரங்குகள் புதிய சூழலைக் கண்டு சத்தம்போட்டு ஆர்ப்பாட்டம் செய்தன.

நிகழ்ச்சியில் குரங்கு ஒன்று, எரியாத சிகரெட் துண்டுகளைப் புகைப்பதைப் போன்று செய்துகாட்டியது.

சீனாவில் குரங்குகளை வளர்ப்பவர்கள் இது போன்ற நேரடிக் காணொளி நிகழ்வில் கலந்துகொள்வது வழக்கம்.

தங்களின் செல்லப்பிராணிகளின் கண்களுக்கு மை தீட்டி, உதட்டுச்சாயம் பூசி அழகுபடுத்துவதில் அலாதி இன்பம் அடைகின்றனர் அவர்கள்.

Loading