“உடலில் ரத்தத்தைப் பூசி இறந்துவிட்டதைப் போல் நடித்தாள்” – டெக்சஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்த சிறுமி

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள ரோப் தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுத் சம்பவத்தில் 11 வயதுச் சிறுமி உயிர் பிழைத்தது பற்றி அவரது தாயார் பேசியுள்ளார்.

சிறுமி மியா கெரியோவின் (Miah Cerrilo) தாய் சுமார் 2 நாள்களுக்கு முன் நடந்த கோரச் சம்பவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

மியாவின் ஆசிரியரும் வகுப்பு மாணவர்களும் துப்பாக்கிக்காரனால் குறிவைக்கப்பட்டனர். அதில் அவரது ஆசிரியர் மாண்டதை மியா நேரில் கண்டதாக அவரது தாயார் சொன்னார்.

அந்நேரத்தில் மியா எவ்வாறு உயிர்பிழைப்பது என்று எண்ணினாள். அவளது உடலில் ரத்தத்தைப் பூசிக்கொண்டு இறந்ததைப் போல் படுத்துக் கிடந்தாள்.

சம்பவத்தில் மியாவுக்குக் காயம் ஏற்பட்டது. அவள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வீடுதிரும்பிவிட்டாள்.

மியா மனத்தளவிலும் உடல் ரீதியாகவும் குணமடைய அவளது குடும்பத்தினர் ஆதரவு அளித்துவருவதாக அவளின் அன்னை குறிப்பிட்டார்.

Loading