Good night’ சொல்வதை வர்த்தகமாக்கிய பெண்;

வாழ்த்து அட்டைகளை வடிவமைப்பதற்கான சேவை… கட்டுரைகளை எழுதுவதற்கான சேவை போன்றவற்றைப் பற்றி நம்மில் பலர் கேட்டிருப்போம்…

ஆனால் ‘Good night’ சொல்வதற்கான சேவையைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

சீனாவின் குவாங்டோங் (Guangdong) மாநிலத்தைச் சேர்ந்த வோங் பீயிங் (Wong Biying) என்ற பெண் கடந்த பத்தாண்டுகளாக அத்தகைய சேவையை வழங்குகிறார்.

ஒரு குறுந்தகவலுக்கு ஒரு யுவான் (20 காசு)… அவ்வாறு அவர் 30,000க்கும் அதிகமான குறுந்தகவல்களை விற்பனை செய்துள்ளதாக South China Morning Post செய்தி நிறுவனம் சொன்னது.

தனிமையால் அவதிப்பட்ட வோங், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டதுண்டு.

தம்மைப் போல் பலர் உள்ளனர் என்று உணர்ந்த அவர், உணர்வுபூர்வமான குறுந்தகவல்கள் வழி மற்றவர்களுடன் இணைய ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணினார்.

Taobao எனும் இணைய வர்த்தகத் தளத்தில் அவர் சேவையைத் தொடங்கினார்.

இருப்பினும் மக்கள் உண்மையிலேயே சேவையை நாடுவார்கள் என்று வோங் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஓர் இரவில் அவர் 300க்கும் அதிகமான குறுந்தகவல்களைக்கூட அனுப்பியதுண்டு.

வாடிக்கையாளர்களில் புற்றுநோய் நோயாளிகள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், ஓரினச் சேர்க்கைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரும் அடங்குவர்.

வாடிக்கையாளர்கள் பெரும்பாலும், வோங்கிடம் தங்களுடைய பின்னணி குறித்துப் பகிர்ந்துகொள்வதுண்டு.

சிறப்புக் கோரிக்கைகளையும் முன்வைப்பதுண்டு.

அச்சேவை வழி, திரைக்கு அப்பால் உள்ள தனிநபர்களின் உணர்வுகள் குறித்து அறியமுடிவதாக வோங் சொன்னார்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, தம்முடைய தனிமையையும் போக்க உதவுவதாக அவர் South China Morning Post-இடம் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *