மறைந்த தந்தையின் வங்கிப் புத்தகத்தைக் கண்டுபிடித்துக் கோடீஸ்வரர் ஆகவிருக்கும் மகன்?

சிலியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தந்தையின் வங்கிப்புத்தகத்தை கண்டுபிடித்த ஒருவர் தற்போது கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

எப்படி?

மறைந்த அவரது தந்தை 1970 ஆம் ஆண்டில் வீடு வாங்க சுமார் 230 வெள்ளியை வங்கிக்கணக்கில் சேமித்து வைத்திருந்தார்.

தந்தை இறந்தபோது அவரது உடமைகள் எல்லாம் ஒரு பெட்டியில் இருந்தன.

அதை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

அண்மையில் தற்செயலாக உடைமைகளை அடுக்கி வைக்க எண்ணிய மகனுக்கு கிடைத்தது தந்தையின் வங்கிப்புத்தகம்.

வட்டி, பணவீக்கம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தந்தையின் சேமிப்புக் கணக்கிலிருந்த பணம் மதிப்பிடப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *