கடலில் மிதக்கும் ராட்சதக் கண்ணைக் கொண்ட கப்பல்
இந்தியப் படகு வடிவமைப்பு நிறுவனம் ஒன்று ராட்சதக் கண்ணைக் கொண்ட கப்பலை வடிவமைத்து சந்தையில் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
சியோன் (Zion) என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் 110-மீட்டர் நீளம் கொண்டது.
இந்தக் கப்பலில் பிரமாண்டமான கண் போலத் தோற்றமளிக்கும் கண்ணாடிக் குவிமாடம் ஒன்று உள்ளது. கப்பலில் இருப்பவர்கள் 360டிகிரி கோணத்தில் சுற்றியுள்ள காட்சிகளைப் பார்க்கமுடியும்.
மேலும் பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது இந்தக் கப்பல்.
கப்பலின் மேல் தளத்தில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்கப் பல வசதிகள் உள்ளன. கடலை ரசிக்க ஒரு தொங்குபாலமும் உள்ளது. அதோடு 12மீட்டர் நீளம் கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் தளமும் உள்ளது.
கப்பலில் ஆடம்பரமான 10 அறைகள், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், திறந்தவெளித் தோட்டம் போன்றவையும் பயணிகளைக் கவரவிருக்கின்றன.
சியோன் கப்பலைத் தயாரிக்க சுமார் 600 மில்லியன் வெள்ளி செலவானதாக நிறுவனம் தெரிவித்தது.

![]()