சர்ச்சையில் சிக்கிய லியோனி: மக்கள் அதிருப்தி!

பட்டிமன்ற பேச்சால் பிரபலமான திண்டுக்கல் லியோனி சமீப காலமாக சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கித் தவித்து வருகிறார்.

திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்வில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கித் தந்தது நீதிக் கட்சி என்றும் பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர் என்றும் கூறினார்.

அதே போல் பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும், பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என்பதற்கு டெல்லியில் அறிவாலயத்தை நிறுவியதே ஒரு எடுத்துக்காட்டு என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.

செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்தவர் தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசுகிறேன் என்று பட்டியலின மக்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *