‘கணவனை எப்படிக் கொல்வது’ என்ற கட்டுரையின் எழுத்தாளர் கணவனைக் கொன்ற சந்தேகத்தில் கைது

கணவனை எப்படிக் கொல்வது’ என்ற கட்டுரையை எழுதிய நான்சி கிரேம்ப்டன் புரோஃபி (Nancy Crampton Brophy) கணவனைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 63 வயது டேனியல் புரோஃபியை (Daniel Brophy) துப்பாக்கியால் சுட்டதாக நம்பப்படுகிறது.

71 வயது கிரேம்ப்டன் புரோஃபி பணப் பிரச்சினையில் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது கணவனின் பெயரில் பல காப்பீடுகள் இருந்ததாகவும் அவர் இறந்தால் மொத்தம் 1.4 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

சமையல் வல்லுநராக வேலைசெய்த டேனியல் புரோஃபி சமையல் கல்லூரியின் வகுப்பு ஒன்றின் வெளியே கொல்லப்பட்டார்.

கிட்டத்தட்ட அதே நேரம் கிரேம்ப்டன் புரோஃபி சமையல் கல்லூரி வெளியே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிரேம்ப்டன் புரோஃபி வைத்திருந்த அதே வகை துப்பாக்கியைக் கொண்டு தான் அவர் கொல்லப்பட்டார்.

ஆனால் தமது துப்பாக்கிக் காணவில்லை என கிரேம்ப்டன் புரோஃபி கூறினார்.

நிதி நெருக்கடியிலும் 10 காப்பீடுகளுக்கு அவர் தொடர்ந்து பணம் செலுத்திவந்தார்.

விசாரணை தொடர்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *