பெண்ணைக் கொன்று புதைத்துக்கொண்டிருக்கும்போது இதயக் கோளாறு வந்து மாண்ட ஆடவர்
அமெரிக்காவில் செய்த கொலையை மறைக்க முயன்ற ஆடவருக்கு மரணம் வந்தது…
தென் கரோலைனா மாநிலத்தில் 60 வயது ஆடவர் ஒரு மாதின் கழுத்தை நெரித்துக் கொன்று தன் வீட்டின் பின்புறத்தில் புதைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்தக் கொலையை மறைக்கும் வேளையில் இதயக் கோளாறு ஏற்பட்டு ஜோசஃப் மெக்கின்னன் (Joseph McKinnon) சம்பவ இடத்திலேயே மாண்டார்.
வீட்டின் பின்புறத்தில் ஓர் ஆடவர் அசைவின்றிக் கிடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைக்க…
அங்கு சென்று பாரத்தால் புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் இன்னோர் உடல்.
அது 65 வயது பாட்ரிஷா டென்ட் (Patricia Dent) என்று அடையாளம் காணப்பட்டதாக CNN செய்தி நிறுவனம் கூறியது.
அவரும் அதே வீட்டில் வசித்து வந்தார்.
மெக்கின்னன் டென்ட்டை வீட்டினுள் தாக்கியிருக்கலாம் என அதிகாரிகள் நம்புவதாக CNN குறிப்பிட்டது.
பின் டென்டின் உடலைக் குழியில் வைத்திருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
மெக்கின்னனின் மரணத்தில் சூழ்ச்சி ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
![]()