குதிரையோ என்று எண்ண வைக்கும் உலகின் ஆக உயரமான நாய்

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நாய் உலகின் ஆக உயரமான நாய் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

Great Dane எனும் வகையைச் சேர்ந்தஅந்த நாயின் உயரம் 1.046 மீட்டர்.

குதிரை என்றும் கூடத் தவறாக எண்ணக் கூடிய அளவுக்கு அது உயரமாக இருக்கிறது.

நாய் குட்டியாக இருந்தபோதே பெரிதாக இருந்ததாக உரிமையாளர் பிரிட்டனி டேவிஸ் (Brittany Davis) கூறினார்.

அது தினந்தோறும் 12 குவளைகள் தீனியைச் சாப்பிடும் என்று கூறப்பட்டது.

Great Dane வகையைச் சேர்ந்த நாய்கள் பெரும்பாலும் மற்ற வகைகளை விட உயரமாக இருக்கும்.

இருப்பினும் அவை சுகாதாரப் பிரச்சினைகளுக்கு எளிதில் உள்ளாகக்கூடியவை என்பதால் அவற்றின் ஆயுட்காலம் குறைவு.

உலகில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஆக உயரமான நாயும் Great Dane வகையைச் சேர்ந்தது தான்.

அதன் உயரம் 1.11 மீட்டர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *