தந்தையின் அஸ்தியை பந்தில் அடைத்து அவரின் கனவை நனவாக்கிய மகன்
அமெரிக்காவில் வசிக்கும் 39 வயது ஜான் (John), தனது தந்தையின் அஸ்தியை பந்தில் அடைத்து அவரின் கனவை உருட்டுப் பந்துப் போட்டியில் (Bowling) நனவாக்கியிருக்கிறார்.
ஜானும் அவருடைய தம்பியும் சிறு வயது முதல் அப்பாவின் உருட்டுப் பந்து விளையாட்டை ரசித்து வளர்ந்தவர்கள்.
அப்பா பெற்ற ஆக அதிகமான புள்ளிகள் 299. எப்படியாவது 300 புள்ளிகள் எடுத்து விட வேண்டுமென்ற அவரின் ஆசை நிராசையானது.
அப்பாவின் மறைவிற்கு பிறகு அவரின் கனவை நனவாக்க முயன்றனர். தந்தையும் அவரது கனவில் பங்கேற்க வேண்டும் என்பது மகன்களின் விருப்பம்.
விளைவு கைவினைக் கலைஞரைக் கொண்டு உருவாக்கப்பட்டது சிறப்பு உருட்டுப் பந்து. அதைப் பிடிக்கும் துளைக்குள் தந்தையின் அஸ்தியை அடைத்து வைக்க அவர்கள் ஏற்பாடு செய்தனர்.
பிறகென்ன விளையாடும்போது தந்தையுடன் இருப்பது போன்ற உற்சாகம் மகன்களுக்கு.
ஜான் விளையாடிய ஓர் ஆட்டத்தில், சிறப்பு அஸ்தி கலந்த பந்தைக் கொண்டு தற்போது 300-புள்ளிகளை எடுத்து தந்தையின் கனவை நனவாக்கியிருக்கிறார்.
இறுதிப் புள்ளிகளை எட்டும் நேரம் மிக நெகிழ்வாக இருந்ததாகவும், கண்ணீரை அடக்க முடியவில்லை என்றும் ஜான் (John) தெரிவித்துள்ளார்.
![]()