என்னுடன் படுக்காவிட்டால் 20 பேரை கூப்பிடுவேன்… குடிபோதையில் 16 வயது கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை; ரஷிய வீரரின் அராஜகம்

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா மேற்கொண்டுள்ள போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கிறது.

அதேநேரம் உக்ரைனும் எளிதில் விட்டு கொடுக்க தயாராக இல்லை. தங்களால் முடிந்த அளவுக்கு ரஷியாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது. இந்த போரை பயன்படுத்தி கொண்டு ரஷிய வீரர்கள் சிலர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைனிய பொதுமக்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர் என கூறப்படுகிறது.

ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள கெர்சன் கிராமத்தில் வசிக்கும் 16 வயதுடைய 6 மாத கர்ப்பிணி ஒருவர் சி.என்.என்.னுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, குண்டுவீச்சில் இருந்து காத்து கொள்வதற்காக எங்களது வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்தோம்.

உணவு கொடுப்பதற்காக மாலை வேளையில் குழந்தைகளுடன் வெளியே வரும்போது, குடிபோதையில் இருந்த ரஷிய வீரர் ஒருவர் எங்களை பார்த்து விட்டார்.

அவர் எங்களை நோக்கி, அனைவருக்கும் என்ன வயது? என கேட்டார். 12 மற்றும் 14 வயதில் 2 சிறுமிகள் இருந்தனர். எனக்கு வயது 16. முதலில், எனது தாயாரை அவர் கூப்பிட்டார். உடனே அவரை விட்டுவிட்டு, பின்னர் என்னை கூப்பிட்டார்.

நான் சென்றதும் உடைகளை களையும்படி சத்தம் போட்டார். நான் முடியாது என்றபோது, என்னுடன் படுக்காவிட்டால் இன்னும் 20 பேரை கூப்பிடுவேன் என்று மிரட்டினார் என்று கூறியுள்ளார்.

குடிபோதையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரஷிய வீரர் அந்த கர்ப்பிணியை கொல்லவும் முயன்றுள்ளார். மற்றொரு ரஷிய வீரர், இந்த சம்பவங்களை நடக்காமல் தடுக்க முற்பட்டார். அதனை நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால், குடிபோதையில் இருந்த ரஷிய வீரர் அதனை கேட்கவில்லை.

அந்த ஆசாமிக்கு நீல நிற கண்கள் இருந்தன. ஆனால், அடர்த்தியாக இருந்தன. வேறு எதுவும் எனக்கு நினைவில்லை என்று 16 வயது கர்ப்பிணி கூறியுள்ளார்.

இதேபோன்று மற்ற ரஷியர்கள் அந்த ஆசாமியை புளூ (நீல நிறம்) என அழைத்துள்ளனர். கடந்த காலத்தில் அந்த ரஷிய வீரர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார். எளிதில் கிடைக்க கூடிய சிறுமியை தேடி கிராமத்திற்குள் அந்த வீரர் போகிறார் என சிலர் பேசியுள்ளனர்.

நாங்கள் உணவுக்காக வெளியே வரவில்லை என்றால், எங்களை அவர் பார்த்திருக்கமாட்டார். என்னை தொட்டிருக்க கூடமாட்டார் என்று அந்த சிறுமி கூறியுள்ளார்.

ஆனால், பாலியல் வன்கொடுமையுடன் முடிந்து விடவில்லை. அடுத்த நாள், சிறுமியை மற்றொரு வீரரிடம் அழைத்து சென்றுள்ளளனர். அவரும் சத்தம் போட்டு, பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால், மிரண்டு போன சிறுமி அச்சத்தில் அழுதுள்ளார். ஆனால், சிறுமி உண்மையை கூறுகிறாரா? அல்லது பொய் கூறுகிறாரா என அறிவதற்காக சோதனை செய்தேன் என்று சிறுமியிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவையா? என்பது பற்றி தனிப்பட்ட முறையில் சி.என்.என். விசாரிக்கவில்லை என்றபோதும், உக்ரைனிய வழக்கறிஞர்கள், இந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து உண்மையை உறுதிப்படுத்தி உள்ளனர். இது ஒரு போர் குற்றம் என சி.என்.என்.னிடம் தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *