Featureஇலக்கியச்சோலை
கந்தர்வகோட்டை எழுத்தாளருக்குத் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, அண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த சு. இராஜமாணிக்கம்,
அண்டனூர் சுரா என்கிற புனைபெயரில் சிறுகதை , கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதிவருகிறவர். இதுநாள் வரை ஏழு சிறுகதைத் தொகுப்புகள்; சொல்லாய்வு நூல் உட்பட நான்கு கட்டுரைத் தொகுப்புகள்; நான்கு நாவல்கள் எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டு பன்முக மேடை பதிப்பகம் வழியே வெளியிட்ட பிராண நிறக்கனவு என்கிற சிறுகதைத் தொகுப்பு அவ்வாண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 29, அன்று, சென்னை தரமணி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பெற இருக்கிறார்.
தமிழ் நாடு அரசினது தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசினைப் பெறும்
எழுத்தாளர் திரு. சு. இராசமாணிக்கம் ( அண்டனூர் சுறா ) அவர்களை
அக்கினிக்குஞ்சும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றது !
![]()
அழகாக அற்புதமாக இனிமையாக எழுதும் உங்கள் தனித்துவமான சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் எழுத்துகளை ஆர்வமுடன் வாசித்து மகிழ வழி வகுத்த அக்கினிக்குஞ்சு இதழுக்கும் பாராட்டுதல்கள்.
எண்ணமதை வண்ணமாக்கும் எழுத்தாளர் திரு. அண்டனூர் சுரா அவர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள். சிந்தனையை செதுக்கி சிகரங்கள் பல தொட அக்கினிக்குஞ்சு இணைய இதழின் வாசகராக வாழ்த்தி மகிழ்கிறேன்.