இலங்கையும் தொடர் பேசுபொருளாகிய மக்கள் போராட்டமும்!…. (பகுதி:1) …. ஏலையா க.முருகதாசன்

எதைப்பற்றியும்பேசலாம்,கருத்துரைக்கலாம்,கண்டிக்கலாம்,விமர்சிக்கலாம் பேசுபொருளாகிய விடயத்தை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விவாதிக்கலாம் என்ற ஜனநாயக உரிமை இன்று இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசக்கெதிரான மக்களின் போராட்டம் பற்றி சாதாரண பொதுமக்கள் தொடங்கி அறிவுஜீவிகள் அரசியல் அறிஞர்கள், பொருளதார அறிஞர்கள்,உலக அரசியல் அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் வரை கருத்துரைத்து வருகின்றனர்.
இப்போராட்டம் பற்றி தமிழர் தரப்பு என்ன கணிப்பீடை வைத்திருக்கின்றது என்பதை பொதுநிலையில் வைத்து பார்க்க முடியாதவாறு வேறு வேறு மனநிலைகளின் வெளிப்பாடாக இக்கருத்துக்கள் இருக்கின்றன.
தமிழர்களிடமிருந்து கருத்துரைப்பாளர் அல்லது கட்டுரை வரைவோரை கீழ்வரும் பகுதிகளாக பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
1.இலங்கையின் பொருளாதார அலகுகளை அறிந்து கொண்டோர்.
2.பௌத்தமத குருமார்களின் அரசியல் பங்காற்றலை அறிந்து கொண்டோர்.
3.தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசுவோரைப் பற்றியது.
4.தமிழீழம் இனியும் சாத்தியமாகும் என நம்புவோர், நினைப்போர்.
5.எல்லாச் சூழ்நிலைகளும் அரசியல் பேரம் பேசுதலுக்கு உகந்தவை என ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவோர்.
6.நடுநிலையாக நின்று இன்றை இலங்கையின் பொருளாதாரச் சரிவை ஆய்வு செய்து கருத்துரைக்கும் ஊடகவியலாளர்கள்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளாராக இருப்பதை குறிப்பாக ஜனாதிபதி தவிர்த்திருக்க வேண்டும்.இலங்கையின் நிர்வாகத்தை கையாள்வதற்கு அப்பால், அவர்களுக்கிடையே நாடாளுமன்ற செயல்பாடுகள், மசோதாக்கள்,ஜனாதிபதி தன்னிச்சையாக எடுக்கும் முடிவகள் என இவையாவும் அவர்களின் குடும்ப ரீதியாகவும் நாளாந்தம் கருத்துரைத்தலுக்கும் விவாதத்திற்கும் இடம் கொடுப்பதை, அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதை நிராகரிக்கும் நிலைக்கு உட்படுத்தியுள்ளது.
ஏனெனில் நாடாளுமன்றம் என்பது, ஜனாதிபதியின் தன்னிச்சையாக முடிவெடுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறைமையினால் வெறும் கண்துடைப்புக்கும் ஒப்புதலுக்குரிய ஜனநாயக போர்வையை போர்த்திக் கொண்ட சர்வாதிகார ஆட்சியாகவே மாறியுள்ளதை வெளிப்படையாக காண முடிகின்றது.
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் அல்லது நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாக்களும் அவை உடனடியாக இலங்கையில் நடைமுறைப்படுத்தலுக்குரியதாக இருந்துவிடுவதில்லை.
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொலைபேசி வாயிலாகவும் சந்திப்புகள் வாயிலாகவும் இதுபற்றிக் கதைத்து அதன் சாதக பாதக விளைவுகளை பிரச்சாரம் செய்வதால்,நாடாளுமன்றத்தினால் முடிவெடுக்கப்பட்ட எந்த முடிவும் செயல்படுத்தப்படாது கிடப்பில் போடப்படுதல், ஒத்திவைக்கப்படுதல் அல்லது நீர்த்துப்போகச் செய்தல் என்பன இடம்பெற்றுவிடுகின்றன.
இதனால் இலங்கையினுடைய அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு நாடாளுமன்றம் தாண்டி தனிமனிதர்களின் அலட்சியப் போக்குக்கு உட்படுகின்றது.
அதன் பலாபலன்களையே இன்று இலங்கை மக்கள் அனுபவித்தக் கொண்டிருக்கிறார்கள்.கருத்துரைப்பாளர்களாக பகிர்;தலில் காணப்படுகின்ற,இலங்கையின் பொருளாதாரமென்றால் என்ன என்பதை அறிந்து கொண்டோர் தெரிவிக்கும் கருத்துக்களில் இருபெரும் பிரிவுகளை உள்ளடக்கியே ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் கட்டமைக்கப்படுகின்றது.நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு பொருளாதாரமே முன்னிலை வகிக்கின்றது.
ஒன்றுக்கு மேற்பட்ட இனம் வாழுகின்ற இலங்கையில் வேண்டுமென்றால் இலங்கையில் நிறைவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டுமென்றால் இலங்கையர் என்ற சமநிலைபேணும் உரிமை உறுதிப்படுத்தப்படுத்தல் மூலமே பொருளாதாரத்தைப் பேண முடியும்.
அரசாட்சியாளர்களினால் ஏற்படுத்தப்படும் எந்த பொருளாதாரக் கட்டமைப்பாகட்டும், அபிவிருத்திகளாகட்டும் மக்களின் தேசப்பற்றுக்கூடாகவே நிறைவேற்ற முடியும் மேம்படுத்த முடியும்.
இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இலங்கையில் உள்ள வளங்களை அறிந்து கொள்வதும் அவ்வளங்களிலிருந்து கிடைக்கும் பலன்களை எவ்வாறு தேசிய நிதியாக திறைசேரியில் நிரம்பிவழியும் செல்வமாக மாற்றிடல் வேண்டுமென்பதை உபாயத்தை நடைமுறைப்படத்தல் வேண்டும்.
தற்சார்பு பொருளாதார கட்டமைப்பு ரீதியாக இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.கடல் செல்வத்தை பணமாக மாற்றுதல் என்ற வணிகம் இருநிலைகளில் காணப்படுகின்றது.
இலங்கை மக்களுக்குள் கடலுணவுகளை வியாபாரம் செய்தலும் கடலுணவுகளை ஏற்றுமதி செய்தலும் இதில் அடங்கும்.
அது போல தேயிலை, றப்பர்,ஏலக்காய்,கராம்பு,கறுவா,கொக்கோ,இரத்தினக் கற்கள்,முத்து, மணல் போன்றவையும் விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமாக காணப்படுகின்றது.இலங்கையில் கனிவளங்கள் அபரிதமாகக் கிடைக்கும் பட்சத்தில் அதனையும் உள்ளடக்கி அவற்றினைச் தற்சார்பப்
பொருளாதாரமாக்குவதும் அதன்மூலம் மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வினைக் கொடுப்பதுமே முக்கியமானதாகும்.
தற்சார்பினால் மக்களின் தேவைகள் பூர்த்தியடையாத போது மக்களுக்குத் தேவையான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
வெளிநாட்டு இறக்குமதியில் ஏற்படும் விலை நிர்ணயித்தலே ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு அமைய அதனை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இது இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும் பிரச்சினையேயாகும்.இவற்றைவிட இலங்கை தனது வருவாயாக சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கின்றது.
இலங்கையில் இத்துறையானது நிரந்தரமற்ற வருவாயைக் கொடுக்கும் ஒரு துறையாகும்.இலங்கை முழுக்கமுழுக்க ஒரு விவசாய நாடாகும்.
வுpவசாயத்தில் தனனிறைவை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ளல் வேண்டும்.
ஏனெனில் உணவு உற்பத்தியும் பசிபோக்கும் தன்னிறைவுக் கொள்கையே இலங்கையில் முதன்மை வகித்தலுக்குரியது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இலங்கையை ஆளும் சமகால அரசின் நிர்வாகத் திறமையின்மை மட்டுமல்ல உலக வணிக நிலவரமுமே காரணமாகும்.
(தொடரும், அடுத்த பகுதி (2) பௌத்தமத குருமார்களின் அரசியல் பங்காற்றலை அறிந்து கொண்டோர்.)
![]()