87 முறை தடுப்பூசி செலுத்தி மிரள வைத்த முதியவர் – விசாரணையில் பகீர் வாக்குமூலம்!
ஜெர்மனியில் 87 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். ஜெர்மனியில் 60 வயதிற்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டில் 61 வயது முதியவர் ஒருவர் 87 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் கூறும்போது, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்கள் சார்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவித்தார்.
இதைக்கோட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பல்வேறு கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று போலி ஆவணங்கள் மூலம் 87 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.
![]()