மயங்கி விழுந்த சீமான்: ஆம்புலன்ஸுக்கு தூக்கிக் கொண்டு ஓடிய தம்பிகள்!
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால், அங்கு திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் செல்லும், வீடியோவும், சீமான் மயக்கமடைவதும், அதற்கு முன்னதாக இயல்பு நிலையில் இல்லாமல் அசாதாரணமான நிலையில் அவர் இருப்பது போன்ற வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெயிலின் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. சீமான் உடல்நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேரலை: 02-04-2022 திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிப்பு – பாதிக்கப்பட்ட மக்களுடன் https://t.co/AIlmpfAc5d
— சீமான் (@SeemanOfficial) April 2, 2022
![]()