எனக்கு விவாகரத்து தரவில்லை என்றால் கோர்ட்டிலிருந்து நிர்வாணமாக செல்வேன்…. மனைவி மிரட்டல்!

சவுதி அரேபியாவில் கணவர் விவாகரத்து தரவில்லை என்றால் நிர்வாணமாக ரோட்டில் நடக்கவிருப்பதாக மனைவி கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் சமீப காலமாக விவகரத்து வழக்குகள் அதிகரித்து வருகிறது. ஒரு ஆய்வின் படி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அந்நாட்டில் 7 விவாகரத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. இப்படியாக பதிவான ஒரு வழக்கில் மனைவி தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். ஆனால் கணவர் விவாகரத்து வழங்க மறுக்கவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.

இந்நிலையில் கணவர் தனக்கு விவாகரத்து தரவில்லை என்றால் தான் கோர்டில் நிர்வாணமாக செல்வேன் என கூறியுள்ளார். இதனால் சற்று பயந்து போன கணவர் அடுத்த முறை கோர்ட்டிற்கு வரும் போது விவாகரத்து வழங்க சம்மதித்துவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *