என்னை கற்பழித்து விட்டார்” என கணவன் மீது வழக்கு தொடர்ந்த மனைவி… கோர்ட் சொன்ன பரபரப்பு தீர்ப்பு…

கர்நாடக மாநிலத்தில் மனைவி ஒருவர் தன் கணவர் தன்னை பாலியல் வன்புனர்வு செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை ரத்து செய்ய கோரி கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி நாகபிரசன்னா கணவர் மனைவியின் விருப்பம் இல்லாமல் அவருடன் உடலுறவு கொள்வதை ஏற்றக்கொள்ள முடியாது. அதை பாலியல் வன்கொடுமையாக கருத வேண்டும். கணவர் என்பதால் பாலியல் வன்கொடுமையில் சலுகைகளை கொடுக்க முடியாது. மனைவிக்கு விருப்பமில்லாமல் பாலியல் தொந்தரவு செய்வது சட்டப்படி குற்றமாகும். அதனால் அவர் மீதான பாலியல் புகார் மீதான நடவடிக்கையை கோர்ட் தடுக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. மனைவி விருப்பமில்லாமல் கணவன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அது பாலியல் குற்றமாகவே கருத வேண்டும் என உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *