மனைவி மட்டன் சமைத்து தராததால் 100க்கு போன் போட்ட இளைஞர்…

தெலங்கானா மாநிலத்தில் போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் தனக்கு தன் மனைவி மட்டன் செய்து தர மறுப்பதாகவும் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பேசியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் முதலில் இதை ஏதோ பிராங்க் கால் என நினைத்துள்ளனர். ஆனால் இவர் மீண்டும் மீண்டும் 6 முறை தொடர்பு கொண்டு தன் மனைவி மட்டன் சமைக்க மறுப்பதாகவும்

அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுள்ளார். இதனால் கடுப்பான போலீசார் இவருக்கு தக்க பாடம் கற்பிக்க முடிவு செய்தனர். உடனடியாக அவரது முகவரியை வாங்கி அங்கு பேட்ரோல் போலீசார் அனுப்பினர்.

அங்கு சென்ற போது தான் உண்மை தெரியவந்துள்ளது. போனில் பேசியவர் பெயர் நவீன் என்றும், அவர் குடிபோதையில் வீட்டிற்கு மட்டன் வாங்கி வந்துள்ளார். அவர் குடித்துவிட்டு வந்திருந்ததால் அவரது மனைவி அதை சமைத்து தர மறுத்துள்ளார். இதனால் கடுப்பான நவீன் போலீசிற்கு போன் செய்தது தெரியவந்தது. அப்பொழுது நவீன் மது போதையில் இருந்ததால் போலீசார் அவரை விட்டு சென்றுனர். ஆனால் சனிக்கிழமை காலை மீண்டும் அவர் வீட்டிற்கு சென்று மது போதை தெளிந்ததும் அவரது கைது செய்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்தனர். அப்பொழுது தான் செய்த தவறை உணர்ந்த அவர் மன்னிப்பு கேட்டார். அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மட்டன் செய்து தரவில்லை என மனைவி மீதே கணவன் புகார் சொன்னது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *