பரவலான ஒரு படத்தால் உருமாறிய சிறுவனின் வாழ்க்கை

கேப்ரியல் சில்வா…. பிரேசிலின் குப்பை மேடுகளில் குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்திவந்த இந்தச் சிறுவனின் வாழ்க்கை தலைகீழானது….பரவலாகப் பகிரப்பட்ட ஒரு படத்தால்.

குப்பை மேட்டிலிருந்து இவன் ஆசை ஆசையாக ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை இழுக்கும் காட்சியைப் படமாக எடுத்தார், AFP நிறுவனத்தின் நிழற்பட நிபுணர் ஜோவ் பாலோ (Joao Paulo).

சென்ற ஆண்டு அந்தப் படம் எடுக்கப்பட்டபோது சிறுவனுக்கு வயது 12.

பிரேசிலின் வடகிழக்கு வட்டாரமான பின்ஹெய்ரோ (Pinheiro) எனும் பகுதியில் அவன் வசித்துவந்தான்.

படம் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் பின் சில்வாவுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் நன்கொடை அளிக்கப் பலர் முன்வந்தனர்.

பிழைப்புக்காகக் குப்பை பொறுக்கும் அந்தச் சிறுவனின் வாழ்க்கை பிரேசிலில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வசிக்கும் பல மில்லியன் பேரின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டது.

அவனுக்கு முதலில் ஒரு கிறிஸ்துமஸ் மரம்…பின் ஒரு சைக்கிள், பின் பணம் அனுப்பப்பட்டன. அதைக் கொண்டு ஒரு சிறு வீடு கட்டி, இப்போது சில்வா தாய், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்துவருகிறான்.

“ஒரு படத்தால் என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றம் வரும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.” என்று ஆச்சரியப்படுகிறான்.

பிரேசிலின் 213 மில்லியன் மக்கள்தொகையில் 24 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாக தேசியப் புள்ளிவிவரத்துறை கூறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *