Featureஇலக்கியச்சோலை

காற்றுவெளி மின்னிதழ்!…. ஏலையா க.முருகதாசன்,ஜேர்மனி.

லண்டன் முல்லை அமுதனின் காற்றுவெளி மின்னிதழும் இலக்கியப் பூக்கள் வானொலி நிகழ்ச்சியும்.

இலண்டனில் வசிக்கும் பிரபல எழுத்தாளரும் கவிஞருமாகிய திரு.மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் „முல்லை அமுதன் „ எனப் புனைபெயர் கொண்டு பல ஆண்டுகளாக காற்றுவெளி என்ற மின்னிதழ் சஞ்சிகையை நடத்தி வருகின்றார்.

ஆரம்ப காலங்களில் காற்றுவெளி சஞ்சிகை அச்சில் வெளிவந்தது.தற்காலச் சூழ்நிலைக்கேற்ப அது மின்னிதழாக மாறியுள்ளது.

நூல் நிலையம் ஒன்றையும் நடத்தி வரும் முல்லை அமுதன் அவர்கள் காலத்திற்கு காலம் சிறுகதைத் தொகுப்புக்களையும்; கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டு வருபவர்.

அண்மைக் காலமாக இன்னொரு பரிணாமாக படைப்பாளிகளால் ஒலிப்பதிவு செய்து அனுப்பப்படும் குறுங்கதைகள் கவிதைகளை வலைத்தள வானொலியூடாகவும் ஒலிபரப்பி வருகின்றார்.

காற்றுவெளி மின்னிதழில் இலங்கை இந்தியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் எழுத்தாளர்கள்,கவிஞர்களுடைய ஆக்கங்கள் பிரசுரமாகி வருகின்றன.

தகவல்: ஏலையா க.முருகதாசன்,ஜேர்மனி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *