சிறப்பு செய்திகள்

உக்ரைன் துறைமுகத்தில் கப்பலில் தவித்த 75 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய தூதரகம் உதவி

உக்ரைன் நாட்டின் தென்பகுதியில் உள்ள மைகோலைவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலில் 75 இந்திய மாலுமிகள் சிக்கி தவித்தனர். கடந்த 24-ந் தேதி, உக்ரைன்-ரஷியா போர் மூண்டதில் இருந்து அவர்கள் அந்த கப்பலை விட்டு வெளியேற முடியாமல் இருந்தனர்.

தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இத்தகவல் தெரிய வந்தது. அவர்கள் வெளியேற தூதரகம் உதவ முன்வந்தது. நேற்று முன்தினம், முதல்கட்டமாக 57 மாலுமிகளை வெளியேற்ற பஸ்களை ஏற்பாடு செய்தது. அவர்களில் லெபனான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 மாலுமிகளும் அடங்குவர்.

இதற்கிடையில் பாதையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையால், மீதி 23 இந்திய மாலுமிகளை நேற்று முன்தினம் மீட்க முடியவில்லை. நேற்று அவர்களை வெளியேற்றும் முயற்சியை மேற்கொண்டதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *