கதம்பம்

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ‘பறக்கும் படகு’ – முதல் முறையாக துபாயில் அறிமுகம்

துபாயில், சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரக நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், தி ஜெட் என்ற பெயருடைய பறக்கும் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசு படகாக உருவாக்கப்பட்டுள்ள இதில் 8 முதல் 12 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிசக்தியால் இயங்கும் இந்த படகின் வெள்ளோட்டம் விரைவில் துபாய் கடல் பகுதியில் காண முடியும் என அந்த தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த படகு இயங்கும்போது சத்தம் வருவது இல்லை. மேலும் தண்ணீருக்கு 80 செ.மீ உயரத்திற்கு மேல் பறந்து செல்லும். ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் இதில் இருந்து புகை போன்ற உமிழ்வுகள் வெளியேறுவதில்லை.

எனவே இந்த படகு சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பறக்கும் படகு மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடையது. விரைவில் துபாய் கடல் பகுதிகளில் இந்த ஜெட் படகு பறந்து செல்லும் காட்சியை அனைவரும் காணலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *