கதம்பம்

உடல்நலக்குறைவால் இறந்த முதியவரின் செல்போன் எண்ணுக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுந்தகவல்

துமகூரு டவுனை சேர்ந்தவர் பசப்பா(வயது 80). வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த பசப்பா கடந்த ஆண்டு(2021) உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று பசப்பா பயன்படுத்திய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு உள்ளது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க கவனமாக இருங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த குறுந்தகவலை சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்து இருந்தனர். இந்த குறுந்தகவலை பார்த்து பசப்பாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உயிரிழந்த பசப்பாவுக்கு சுகாதாரத்துறையினர் எங்கிருந்து 2 டோஸ் தடுப்பூசி செலுத்தினர் என்று கேள்வி எழுப்பி உள்ள பசப்பாவின் குடும்பத்தினர் இலக்கை முடிக்க இதுபோன்ற செயல்களில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *